பக்கம்:மறைமலையம் 15.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

❖ 15❖ மறைமலையம் – 15

வேதத்தின் கண்ணவான அக்காரிய மூர்த்திகளுபாசனையும் மந்தம், மந்ததரம், தீவிரம் என்னுந் தாழ்ந்த பக்குவத்தின் கண்ணராய்ப் பரஞானப் பேறின்றிப் பாசஞான

பசுஞானங்களாம் அபரஞானம் மாத்திரம் வாய்க்கப் பெற்றுடையார்க்குப் பயன் தருவன வாய் அந்நெறியே அவர் அறிவினை முதிர்வித்துப் பரஞானம் பெறுதற்குரிய மேல்நிலைக் கண்ணே செலுத்துமாகலான் அவையும் அம்மந்த பக்குவமுடையார்க்கு வேண்டற் பாலனவேயாம். வேதத்துள் அன்னமே பிரமம் தேகமே பிரமம் இந்திரியங்களே பிரமம் அந்தக் கரணங்களே பிரமம் பிராணனே பிரமம் விஞ்ஞானமே பிரமம் சீவான்மாவே பிரமம் என்றுள்ள வாக்கியங்க

ளல்லாம் இக்கருத்துப் பற்றியே எழுந்தனவாம். இங்ஙனங் கீழ்ஒன்று சொல்லி மேல் ஒன்றுசொல்லி முறை முறையே உயர்ந்த கதிபற்றிச் செல்லுங்காலத்துக் கீழ்க்கீழ் நின்ற வாக்கியங்க ளெல்லாம் மேல்மேற் செல்லும் வாக்கியங்களான் மறுக்கப்பட்டுப் பூருவபக்கமாய் ஒழியுமாதலால் மேல்நிலைக் கண் முடிவாய் நின்றவாக்கியம் ஒன்றுமே சித்தாந்தமாக நிலைபெறுவதாம். தேகமே பிரமமென்ற கீழ்நின்ற வாக்கியம் அதன்மேற் செல்லும் இந்திரியமே பிரமமென்ற வாக்கியத் தான் மறுக்கப் படுதலும், அஃது அதன் மேற்செல்லும் பிராணனே பிரம மென்னும் வாக்கியத்தான் மறுக்கப் படுதலும், விஞ்ஞானமே பிரமமென்ப தனால் மறுக்கப் படுதலும், அஃது அதன் மேற் செல்லும் சிவான்மாவே பிரமமென்பதனான் மறுக்கப் படுதலும் உய்த்துணரவல்ல நடுநிலையுடையார்க்கு, இவை யெல்லா வற்றையும் ஒருங்கே

சேர்த்து

66

என்னும் அதர்வசி கோபநிடத மந்திரமானது இவை யனைத்தும் பிறக்கின்றன. இப்பிரமன் விண்டு உருத்திரன் இந்திரனென்னும் அவரெல் லாம் பிறக்கின்றனர், பூதங்களோடு இந்திரியங்களெல்லாம் பிறக்கின்றன. காரணங்களைத் தோற்று விப்பானும் தியாதாவுமான காரணன்றான் பிறப்பானல்லன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/59&oldid=1583111" இலிருந்து மீள்விக்கப்பட்டது