பக்கம்:மறைமலையம் 15.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

நிரம்பவும்

27

காரணப்பொருளும் ஐசுவரிய மனைத்தையுமுடையானும் அனைத்திற்கும் ஈசுரனுமான சம்பு ஆகாய நடுவிற் றியானிக்கப் படும்” என்று அக்காரியப் பிரமோபாசனைகளையெல்லாம் மறுத்துத் தான் ஒன்றாற் காரியப் படுவானல்லனாய்த் தான் எல்லா வற்றையுங் காரியப் படுத்துவானாய்த் தனக்கு மேற்காரண மொன்றின்றித் தானே யனைத்திற்குங்காரணனாய் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாய்த் தத்துவங்கடந்ததாய் உள்ள சிவபரம்பொருளே சிதாகாயமத்தியிற் றியானிக்கப்படுவ தென்று நிச்சயப்படுத்திய தன் உண்மை இனிது விளங்கும். அல்லதூஉம், வேதங்கள் ஒவ்வொன்றும் கருமகாண்டம், உபாசனாகாண்டம், ஞான காண்டம் என்னும் முப்பகுதி யாய்ப் பிரிக்கப்பட்டு விளங்கும். இவற்றுட் கருமகாண்ட உபாசனா காண்டப்பகுதிகளே மிகுதியாய் விரிந்து கிடப்பதல்லாமல் ஞான காண்டப்பகுதி மிகவுஞ் சொற்பமாய் சுருங்கிக்கிடக்கும்.ஞான காண்டத்திற் குரியராக ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தி விடுக்கும் அம்மாத்திரையேயன்றித் தம்மிற் றாமே பிரயோசனந் தருவ தில்லாத கருமகாண்டப் பகுதிகளும் உபாசனா காண்டப் பகுதிகளும் மிகுதியாயிருத் தலினாலும், அவ்வேதங்கள் தம் மிற்றாம் பயன் றருவதின்றிப் பாலைச்சுரப்பிக்கும் அம் மாத்திரையே பயன்படுதலுடைய சத்ததாதுக்களாற் கட்டப்பட்ட பசுவினோடு உவமிக்கப் படுவனவாயின. அற்றாயினும் அக்கீழ்நிலையிலேயுள்ள அக்காரியப் பிரமோபாசனைகள் ஒன்றினொன்றேற்ற முடையனவாய் மேனிலைக் கண்ணதான காரணப் பிரமோபாசனைக்குச் சோபானங்களாய் நிலை பெறுவனவா மாதலால் அவையெல்லாம் நம்மாற் பெரிதுங் கௌரவிக்கற் பாலனவேயாம். ஒரு பருவதத்தின் முகட்டிற் செல்ல வேண்டு வானுக்கு அடிவாரத்திலிருந்து வெட்டப் பட்டிருக்கும் படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் அவன் மேலேறி போவதற்கு இன்றியமையாது வேண்டப் படுதல்போல அவையொவ் வொன்றும் ஆன்மாக்களின் அறிவுவளர்ச்சிக்கு அவசியமாவன வேயாம். அற்றாயினும் ஒருசிலர் ஓரிரண்டு படிகளின் மேற் சென்ற மாத்திரையானே சலிப்புற்று மேலேறிச் செல்லுதற் குரிய ஆற்றலில்லாமையினாலே அப்படிக்கட்டுகளின் பக்கத் திலுள்ள மலைப் பாறையின் அமைதிகளைப் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/60&oldid=1583112" இலிருந்து மீள்விக்கப்பட்டது