பக்கம்:மறைமலையம் 15.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

29

கூறுதல்பற்றியே அவற்றைப் பசுநூல் என்றும் அறிவுடையோர் வழங்குவாராயினர். துவிதீய சமயாசாரிய சுவாமிகளான திருநாவுக்கரையரும்,

“வேதமோதிலென்சாத்திரங் கேட்கிலென் நீதிநூல் பலநித்தல் பயிற்றிலென் ஓதியங்கமொராறு முணரிலென்

ஈசனை யுள்குவார்க்கன்றி யில்லையே'

என்று திருவாய் மலர்ந்தருளியதூஉம், அற்புத வைராக்கிய சுத்த சிவஞான சிரோட்டரான பட்டினத்துப் பிள்ளையார்.

“நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே மாற்றிப்பிறக்க வகையறிந்தாயில்லை மாமறைநூல் ஏற்றிக்கிடக்கும் எழுகோடி மந்திர மென்னகண்டாய் ஆற்றிற்கிடந்துந் துறையறியாம லலைகின்றையே”

என்றருளிச் செய்ததூஉமென்க. இங்ஙனம் அதிதீவிர பக்குவ முடையார்க்கன்றி ஏனையோர்க்கவை பயன் படாமை மேலெடுத்துக் காட்டிய பசுவுவமையானும் இனிது பெறப் படுவதாகும். யாங்ஙனமெனில், பசுவின் உடம்பிற் சாரமாய் வியாபித்திருக்கும் அமிழ்த சத்துக்கள் அப்பசு தானீன்ற கன்றைக் கண்டான் மாத்திரம் புலப்பட்டுப் பாலாய்ச் சுரந்தொழுகு வதல்லது, வெறொரு வாற்றானும் வெளிப்படுத லில்லை. அதுபோல் அதிதீவிர பக்குவமுடைய ஆன்மா வென்னுங் கன்றைக் கண்டான் மாத்திரம் வேதம் என்னும் பசு தன்கண் அதிசூக்குமமாய் வியாபித்திருக்கின்ற சிவம் என்னும் அமிழ்தத் தைப் புலப்படக் காட்டி ஊட்டு மல்லது பிறஅபக்கு வரைக்கண்டால் ஒரு சிறிதாயினும் அதனைக்காட்ட மாட்டா தாகலின் அவ்வேதத்தினை அறிவுடையார் மயக்க நூலென் றும் வஞ்சனை நூலென்றுங் கூறியது இழுக்கன்றென்க. வேத நூலாற் சிவம் எளிதினறியப் படாதது பற்றியே

"மறையினா னயனான் மாலான் மனத்தினான் வாக்கான் மற்றுங் குறையிலா வறிவினாலுங் கூறொணா தாகிநின்ற இறையனார் கமலபாத மின்றியா னியம்புமாசை

நிறையினார் குணத்தோர்க்கெல்லாம் நகையினை நிறுத்துமன்றே”

என்னுந்திருவாக்கு மெழுந்தது.

П

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/62&oldid=1583114" இலிருந்து மீள்விக்கப்பட்டது