பக்கம்:மறைமலையம் 15.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் – 15

“பூதங்களல்ல பொறியல்ல வேறு புலனல்ல வுள்ளமதியின் பேதங்களல்ல விவையன்றி நின்ற பிறிதல்லவென்றுபெருநூல் வேதங்கிடந்து தடுமாறு வஞ்சவெளியென்பகூடன் மறுகிற்

பாதங்கணோவ வளையிந்தனாதி பகர்வாரை யாயுமவரே” என்னும் ஆன்றோர் திருவாக்கும் இக்கருத்தினையே போதிப்ப தொன்றாம்.

இனி இங்ஙனம் வஞ்சனையாற் சிவத்தை அதியிரகசி யமாய் வைத்து அதிதீவிர பக்குவமுடைய அதிகாரிகட்கு மாத்திரம் மின் மினி விளக்கம்போற் காட்டுவதாகிய வேதம் என்னும் பசுவிற் கறந்தெடுக்கப்படுகின்ற பாலே ஆகமங்கள் என்று மேலைத் திருவாக்கினால் நன்குணர்த்தப்பட்டது. ஆகமங்கள் இருபத் தெட்டாம். அவை காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகந்திரம், அஞ்சுமான் சுப்பிரபேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், விம்பம், புயோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தான சருவோத்தமம், பாரமேச்சுரம், கீரணம், பேதம், வாதுளம் என்பனவாம். வேதங்கள் நான்கினும் மிகவுஞ் சுருக்கமாய் வைத்துக் குறிக்கப்பட்ட சிவம் ஒன்றனையே இவ்விருபத் தெட்டா கமங்களும் மிகவிரித்து விளக்குவதன்றி வேறொன் றனையுங் குறியாமையால் அவை முழுவதூஉம் பாலாக உருவகஞ்செய்யப்பட்டது நிரம்பவும் பொருத்தமேயாம். அற்றேல், வேதத்தின் பிராணனாய்வைத்துச் சுருக்கிச் சொல்லப் பட்ட அச்சிவ பரம்பொருளை இங்ஙனம் இருபத்தெட் _ாகமங்களால் விரிக்க வேண்டிற்றென்னை யெனின்; - இந்த அண்டத்திலுள்ளனவும் இப்பிண்டத் திலுள்ளன வுமான சருவ பதார்த்தங்களும் ஒருவரம் பினுட்பட்டனவாகலான் அவை யெல்லாம் ஆன்ம வறிவினால் அளந்துரைக்கப்படுவன வேயாம். 'சிவம்' என்னும் பரம்பொருள் அண்டபிண்டங் களிரண்டினு மொன்றன்றாய்ச் சீவவறிவுக்குச் சிறிதும் புலப்படாத அகோசரப் பொருளாகலின், அதுதன்னை ஆராய்ந் துரைக்கப்புகுந்த அச்சிவாகமங்களும் அங்ஙனம்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/63&oldid=1583116" இலிருந்து மீள்விக்கப்பட்டது