32
❖ 15❖ மறைமலையம் – 15
ப்
உள்ள நீரைப் போக்கிக்கடைந்த வழி அதன்கண் உள்ள சார மெல்லாம் ஒருங்கு திரண்டு நெய்யாய் எழுதல் போல, வேதசாரமாய் விளங்கும் அச்சிவாகமங்களும் சரியாகாண்டம், கிரியாகாண்டம், யோககாண்டம், ஞான காண்ட ம் என நால்வகையாய்ப் பகுக்கப்பட்டு ஆராய்ந் தறிதற்கு அருமை யுடையனவாய் மிகவிரிந்து கிடத்தலின் அவையும் நெகிழ்ந்த பக்குவமுள்ளனவா மாகவே அவற்றின் கண் உள்ள சரியை கிரியை என்றற் றொடக்கத்து ஏ ஏனை மூன்றுகாண் பொருளையும் விடுத்து ஞானகாண்டப் பொருள் விசேடமாய் விளங்கும் துரியாதீதப்பொருளான சிவத்தைமாத்திரங் குழைந்துருகப்பாடித் திருஞான சம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசுகளும், சுந்தரமூர்த்திகளும், மாணிக்கவாசகப் பெருமானும் திருவாய் மலர்ந் தருளிய தேவார திருவாசகச் செந்தமிழ் நான்மறைகள் அச்சிவாகம சாரமாய்த்தோன்றி அவற்றினும் சிறப்புடையன வாம் என்க. தத்துவங்களுட்பட் எந்த மூர்த்திகளையும் பாடிற் றிலராய்ச் சிவமொன்றையே சைவசமயாசிரியன்மார் நால்வரும் துதித்த இரகசியவுண்மை சைவசமயிகளாற் பெரிதும் போற்றப்பால தாம். இது நிற்க.
இனி அப்பாலின்கட் சாரமாய்த் திரட்டி எடுத்த நெய்யினுட்சுவை இல்வழி அது பயன்படாமையால் நெய்யினும் அதன் இன் சுவையே சிறப்புடைத்தாம். சிவாகம ஞான காண்டப் பொருட்கு ஞேயப் பொருளான சிவம்தன்னை யறியும் ஞான மில்வழி யான்மாக்கட்குப் பயன்படமாட்டா தாகலின் அச் சிவத்தினும் அதனையறியும் ஞானமே வசிட்ட முடைத்தாம். ஆகவே அச்சிவத்தையுணர்த்தும் தேவார திருவாசகச் செந்தமிழ் நான்மறையினும், சிவஞானத்தைப் போதிக்குஞ் சிவஞான போதமே கழிபெருஞ் சிறப்புடைத் தாம். அற்றாயினும், பசுவி னின்று வேறு பிரித்தெடுக்கப்படும் பால்போல வேதத்தினின்றும் தாம்வேறாய்த் தனித்து நடைபெறுஞ் சிவாகமங்கள். அச்சிவாக மங்களேபோல ச்செந்தமிழ்ச் சிவஞான போதமும் தான் வேறாய்த் தேவார திருவாசகச் செந்தமிழ் நான்மறைகளை விட்டு நடைபெறுமோ வெனின்; அங்ஙனம் நடைபெறாது; எங்ஙனம் சிவமும் அச்சிவத்தை யறியும் ஞானமும் ஒன்றைவிட்டொன்று பிரியமாட்டாவோ அங்ஙனமே சிவத்தை யுணர்த்தும் தமிழ்