பக்கம்:மறைமலையம் 15.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

33

நான் மறைகளும் சிவஞானத்தை யுணர்த்துஞ் சிவஞான போதமும் ஒன்றை விட்டொன்று பிரியமாட்டா; இரண்டும் அபேதமாகவே விளங்கும். இது மேற்காட்டிய உபமானத் தானும் பெறற் பாலதேயாம். நெய்யாகிய குணிப்பொருளும் அதன்கட் சுவையாகிய குணமும் ஒன்றைவிட்டொன்று பிரியாமற் றாதான்மிய சம்பந்தமுற்று அபேதமாக நிற்றல் போலத் தேவார திருவாசகங்களாகிய குணியும் அவற்றின் குணம்போல விளங்குகின்ற சிவஞானபோதமும் அபேத சம்பந்தமுற்றுப் பொலிவனவாம். வடமொழியில் வேதத்தைத் தழுவா மாற்றாமே நடைபெறுந் தன்மையவாய் விளங்கும் சிவாகமங்கள்; இதுபற்றியே வாயுசங்கிதையில்,

66

இருபத்தெட்டாகமந் தழுவா, தழிவிலாத சித்தாந் தத்தின் பகுதியா யமரும்" என்னும் வாக்கியம் எழுந்தது. இது பற்றியே து சிவாகமங்களை ‘அச்ரௌதம்’ என்று அறிவுடை யோர் வழங்குவர். அச்ரௌதம் என்றால் சுருதி சம்பந்த மில்லாதது என்றர்த்தமாம். இப்பொருள் காணமாட்டாதார் ஆகமம் சுருதிவிரோத மென்பர். அது பொருந்தாமை முற்காட்டிய திருமூலர் திருவாக்கான் இனிது பெறப்படும்.

L

இனித் தெய்வச் செந்தமிழ்ப் பாஷையிலேயுள்ள வேதங்களான தேவார திருவாசகங்களும், ஆகமங்களான திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் சிவஞான போதமென்றற் றொடக்கத்தனவும் தம்முள் ஒன்றையொன்று விட்டு நீங்காவாய் நடைபெறுந் தன்மையவாம். வடமொழிக் கண்ணுள்ள வேதங் கள் கன்ம பாகங்களை மிக விரித்துக் கூறி அவலம்படுகின்ற மையால் அவை சுத்தஞானமயமாயுள்ள சிவாகமங்களை முற்றுந்தழுவி நடைபெறுகின்றில. இனித் தமிழ் நான்மறை களோவெனின் சுத்தஞானவிசேட ஞேயப் பொருளாம் சிவத்தையே விடயமாய்க் கொண்டிருத்தலால், அவையும் சுத்தஞானத்தை விடயமாகவுடைய சிவஞான போதமும் தம்மிற் பெரிதொத்துப் பிரகாசிப்பவா யினவென்க.

தமிழ்ப்பாஷையில் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல் களெல்லாம் சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையனவாம். இலக்கண நூலாசிரிய ரெல்லாரும் நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/66&oldid=1583119" இலிருந்து மீள்விக்கப்பட்டது