34
❖ - 15❖ மறைமலையம் – 15
கட்டப்பட்ட
அமைதிகளைப் பற்றிச் சொல்லுமிடத்து முதலிற் ‘சுருங்கச் சொல்லல்' என்பதனையே சிறப்பாக வைத்து ஓதினார். அங்ஙனஞ் சுருங்கிய சொற்களால் தொடுக்கப்படினும் அவற்றின் பொருள் தெற்றென விளங்காநிற்கும். உதாரண மாகத் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறள் நூலைப் பாருங்கள்! அவ்வாசிரியர் தாம் விளக்குதற்கு எடுத்துக் கொண்ட எடுத்துக் கொண்ட பொருளை மிகவுஞ் சுருக்கமாகத் தெரித்தற் பொருட்டு எவ்வளவு சிறிய குறட்பாவினை எடுத்துக் கொண்டார்! அக்குறட்பாக்களெல் லாம் ஒன்றே முக்கால் அடிகளால் அமைக்கப்பட்டிருக் கின்றன. அப்பாவில் ஒவ்வொரு சொல்லும் பொருட் பயன் நிரம்பி விளங்குகின்றது. அப்பாவில் ஒரு சொல்லை எடுத்து விடினும் அது முழுவதூஉம் பொருள் பயவாது அழியும். வாயில் மேனிலை வளைத்துக் 6 ஒரு மாளிகை அம்மேனிலை மூலைக் கல்லினையே நிலைக் களனாய்க் காண்டு நிற்கின்றது; அம்மூலைக் கல்லைப் பெயர்த்து விடின் அக்கட்டிடம் எல்லாம் கீழ் விழுந்து நுறுங்கி அழிதல் திண்ணமேயாகும். அதுபோல, நாயனார் திருவாக்கான அச்செய்யுளில் ஒவ்வொரு சொல்லும் ஏனைய வற்றைத் தாங்கும் மூலைக்கற்போலப் பொருட்சார முற்றுப் பொருந்தி யிருக்கின்றது. அங்ஙனஞ்சொற் சுருக்கமுற்று நிற்றலால் பொருள் புலப்படாமல் புதைந்து கிடக்கின்ற தோவெனின், ஒரு சிறிதுமில்லை. ஒள்ளிய பளிங்குபோல் தெள்ளத் தெளிந்து நீர் ததும்பும் ஒரு தடாகம் மிக மிக அழகுடையதாயிருப்பினும் அதன் அடிப்படையெல்லாம் காண்பார் கண்ணுக்கு இனிது விளங்கித் தோன்றல் போலவும், கண்ணாடி ஒன்று தான்டருவத்தான் மிகச் சிறிதேயாயினும் அது தன்பக்கத்தே வானளாவித் தோன்றும் மாடமாளிகை முதலிய பேருருவத்தை யெல்லாம் தன்னுட் செறித்துத் தெளிவாய்க் காட்டுதல் போலவும் திருக்குறட் பாவின் பொருள் நன்கு புலப்பட்டுக் கிடக்கின்றது. இதுபற்றி யன்றே கபிலர்,
"தினையளவு போதாச் சிறு புன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாடா! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”