* முன்பனிக்கால உபந்நியாசம்
என்று உரைப்பாராயினார். அரிசிற் கிழாரும்
“பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேர - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல்லால்”
35
என்று ஓதியதும் இதனை வற்புறுத்துதல் காண்க. இங்ஙனந் திருக்குறட் பாட்டுகள் சொற் சுருங்க அமைக்கப்படினும் பொருள் தெளிவாய்க் காட்டுதல், இவை தம்மை நாலடியார் செய்யுட்களோடு ஒப்பவைத்து நோக்கினால் நன்கு புலப்படும். உதாரணமாக ஒன்று காட்டுவாம். நாலடியாரில்,
"தினையனைத்தே யாயினுஞ் செய்த நன்றுண்டாற் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து என்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட நன்றில நன்றறியார் மாட்டு”
எனப்போந்த செய்யுட் பொருள் முழுவதும்,
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் றெரிவார்”
என்னும் அருமைத் திருக்குறட் பாட்டில் அடங்குதல் காண்க. அவ்வாறு அடங்குதலே யன்றியும் அப்பொருள் இதன் கண் இ னிது விளங்குதல் கற்றறிவில்லார்க்கும் புலனாம். “தினை யனைத்தே யாயினுஞ் செய்த நன்றுண்டால்" என்னும் நாலடி யார் செய்யுள் அடி “தினைத்துணை நன்றி செயினும்” எனுந் திருக்குற எடியிலும், “பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்” என்பது “பனைத்துணையாக் கொள்வர் பயன் றெரிவார்” என்பதினும் அடங்குதல் காண்க. நாலடியாரின் மற்றிரண்டடி களும் திருக்குறளில் அடங்கவில்லையா லெனின்; - ‘பயன் தெரிவார் பனைத்துணையாக் கொள்வர்' என்ற மாத்திரை யினாலே 'பயன்தெரியார் பனைத்துணை செய்த நன்றி யினையும் தினைத்துணையேனுங் கருத மாட்டார்' என்பது அத்திருக்குறட் பாவினால் இனிது பெறப்படுதலின் அது வேண்டா கூறுதலேயாம். தானேயும் விளங்காத பொருளையே கூற வேண்டுமல்லது, எளிது புலப்படுவ தனைக் கூறுதல்
.