பக்கம்:மறைமலையம் 15.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

37

வண்ணம் அப் பொருளைப் பலவகையால் அலங்கரித்துச் சான்றோர் பலநூல்கள் செய்வாராயினர். இயற்கையிலேயும் அழகு டையளாய் விளங்கும் ஒரு மங்கையைப் பல்வகை ஆடை அணிகலங் களாற் புனைந்து சிறப்பித்த வழி அவள் அச் செயற்கை நலத்தால் ஆடவரைக் காமுறுத்தல்போல, அலங்கார நெறிபற்றி வரும் நூல்கள் மந்த பக்குவமுடையாரைப் பெரிதும் வசீகரிக்கு மென்க. மிகச் சிறந்த பழந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தினுள்

உணர்த்தப்படும் உண்மை

நுண்

பொருள்கள் சிலவேயாம்; இவ்வுண்மைகளை உலகத்தார்க்கு உணர்த்தி அறிவு கொளுத்தல் வேண்டி அவற்றைப் பலவாற்றால் அலங்கரித்து ஒரு பெருங்காப்பியம் இயற்றுவேமென அதன் ஆசிரியர் இளங்கோவடிகள்,

66

அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை யுருத்துவந்தூட்டு மென்பதூஉஞ் சூழ்வினைச் சிலம்பு காரணமாக

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”

என்று பாயிரவுரை கூறியதனை உய்த்துணருங்கால் செங் கோன் முறை திறம்பினாரை அறக்கடவுள் கொல்லுதலும், கணவன் மாட்டு உண்மை யன்புடைய கற்புடை மகளிரைச் சான்றோரும் வழிபடுதலும், ஊழ்வினைப்பயன் உடை யானை விடாது பற்றி வந்து பந்த முறுத்தலும் ஆகிய மூன்றுமே சிலப்பதிகாரம் முழுவதூஉம் விளக்கப்பட்ட நுண்பொருள் களாம்; இவை மூன்றும்,

“வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்த மொல்லைக் கெடும்”

“பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழு முலகு"

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்"

(குறள் 563)

(குறள் 58)

(குறள் 380)

என்ற தெய்வத் திருக்குறட்பாக்கள் மூன்றினும் அடங்குதல்

காண்க. உலகத்திலுள்ள எல்லா அறிவு நூற்பொருள்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/70&oldid=1583123" இலிருந்து மீள்விக்கப்பட்டது