பக்கம்:மறைமலையம் 15.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

❖ - 15❖ மறைமலையம் – 15

விசிம்மாத்துவிதிகள், துவைதிக ளென்னும் மூவரும் தம்மிலே திறம்பிக் கூறிய பொருள்க ளெல்லாம் பொருந்தாமையும், சுத்தாத்துவிதப் பொருள் இலக்கண நெறி, தருக்கநெறி, சாத்திரநெறி முதலான எந்நெறி யானும் பொருத்த முடைத் தாதலும் நன்கு உணர்த்தப் படுகின்றன. இனிப் பரிணாம வாதிகள் கன்மமில்லையெனக் கூறுதலும், கிரீடாப்

6

பிரமவாதிகள் இறந்தவுயிர் மீளப் பிறப்பதில்லை யெனலும் ஈண்டே மறுக்கப் படுகின்றன. பொருளுக்கு அதன்சத்தி வேறென்னும் மீமாஞ் சகர் மதமும், பொருளுஞ் சத்தியும் ஒன்றே யென்னும் நையாயிகர் மதமும் பொருந்தாமை ஈண்டே காட்டப்படுகின்றன.

உளதில தென்றலின்" என்னும் மூன்றாம் சூத்திரம் காணப்படுகின்ற அசேதன சரீரத்தின் வேறாய் அதனை இயக்கும் சேதனப் பொருளாகிய ஆன்மா உண்டென்று நாட்டுகின்றது. இல்பொருளே ஆன்மா என்னும் சூனியான்ம வாதியும், உடம்பே ஆன்மா என்னும் தேகான்ம வாதியும், ஐம்பொறிகளே ஆன்மா வென்னும் இந்திரியான்மீக வாதியும், கனவுடம்பே ஆன்மா வென்னும் சூக்குமதேகான்ம வாதியும், பிராணனே ஆன்மா வென்னும் பிராணான்ம வாதியும், பிரமமே ஆன்மாவென்னும் விஞ்ஞானான்ம வாதியும், எல்லாக் கருவிகளும் ஒன்றுகூடிய கூட்டமே ஆன்மா வென்னும் சௌத்திராந்திகர் வைபாடிகர் முதலிய சமூகான்ம வாதிகளும்

ஈண்டு மறுக்கப்படுகின்றனர்.

66

“அந்தக்கரணம்” என்னும் நான்காஞ் சூத்திரமும் ஆன்மா உண்டென்பதனையே வலியுறுத்துகின்றது.மேலை மூன்றாம் சூத்திரத்திற் கூறாது எஞ்சிநின்ற அந்தக்கரணான்ம வாதிகள் மதம் ஈண்டு ஆராய்ந்து மறுக்கப்படுகின்றது. ஆன்மா ஆணவமல முடைத்தாய் அறிவிழந்தமையும், மாயை அவ்வறிவைச் சிறிது விளக்குதற்குபகார முடைத் தாதலும் ஈண்டே உணர்த்தப்படுகின்றன. சாக்கிர முதலான ஐந்தவத்தை களியல்பும் ஈண்டே காட்டப்படுகின்றன.

'விளம்பிய வுள்ளத்து மெய் வாய் கண் மூக்கு” என்னும் ஐந்தாம் சூத்திரம் ‘ஆன்மாவும் அவ்வான்மாவுக்கு அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/73&oldid=1583126" இலிருந்து மீள்விக்கப்பட்டது