முன்பனிக்கால உபந்நியாசம்
41
விளக்கும் பிரகிருதியின் காரியமான ஐம்பொறி முதலான கருவிகளுமே அமையும், இவற்றின் வேறாகக் கடவுள் ஒன்று வேண்டாம்’ எனச் சாங்கியர் கூறுதலை மறுத்து அவற்றை அதனோடு இயைவித்து உபகரிக்கின்ற முழுமுதற்கடவுள் இன்றியமையாது வேண்டப்படும் என வலி யுறு லி யுறுக்கின்றது. ஈண்டேஈசுர வவிகாரவாதி மதமும் மறுக்கப்படுகின்றது.
உ
உணருருவசத்தெனின்” என்னும் ஆறாஞ் சூத்திரம் ஆன்ம அறிவால் அறியப்பட்டு நிலையின்றி அழிவது அசத்து என்பதூஉம், முழுமுதற்கடவுள் அங்ஙனம் ஆன்ம வறிவால் அறியப் படுவதன் றாகலின் அஃதழிவில்லாச் சத்தா மென்பதூஉம் வரையறுத்துப் பரம்பொருளியல்பு முற்ற அறிவுறுத்துகின்றது. முதல்வன், பிரபஞ்சத்தைப்போல் தருக்கவறிவா லறியப்படுவதேயாமென்னும் நையாயிகர் மதமும், அப்பரம்பொருள் அநிருவசனம் என்னும் மாயா வாதி மதமும், அதுதியானபாவனைக்கட் கோசரமாம் என்னும் யோகநூலார் மதமும், உயிர் மலநீங்கியவழி முத்தியிற் சிவனோ டொப்ப எண்குண முதலியன உடையவாம் என்னுஞ் சிவசமவாதி மதமும், முத்தியிற் சிவத் தோடு ஒன்றாய்ப் போவதே உயிரென்னுஞ் சிவாத்துவித சைவர் சுத்தசைவர் முதலியோர் மதமும் ஈண்டெடுத்து மறுக்கப்படுகின்றன.
6
“யாவையும் சூனியம்” என்னும் ஏழாஞ்சூத்திரம், மேலைச் சூத்திரத்தால் சத்தாவது சிவம் அசத்தாவது பிரபஞ்சமென் றுணர்த்தியவழி உயிர் சத்து அசத்து என்னும் இரண்டில் எதன்கட்படுமென எழும் ஆசங்கை போக்குதற் பொருட்டு உயிர் சத்தும் அசத்து மன்றாய்ச் சதசத்தா மியல்புடைத்தென அறிவுறுக்கின்றது. சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய பிரபஞ்சம் பிரகாசியா தென்னும் உண்மை இனிது விளக்கப் படுகின்றது. இதன்கட் சிவமே எல்லாமாம் என்னும் சிவாத்துவித சைவர் மதமும், அசத்தாகிய காரணங்கள் முத்தி நிலையிற் சிவகரணமாய்ச் சிவத்தை அறிதல் செய்யுமென்னுஞ் சிவ சங்கிராந்தவாதி மதமும் மறுக்கப்படுதல் காண்க.