பக்கம்:மறைமலையம் 15.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

.

49

என்றறிமின்கள்! இற்றைக்கு அறுநூற்றைம்பது வருடங்களுக்கு முன் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப பிள்ளையார் அருமைப் புதல்வியைத் திருவெண் காட்டிலிருந்த அச்சுதன் என்பார் L மணந்து இல்லற நெறி வழாது இருவரும் நேசவுரிமையிற் சிறந்து வாழ்ந்து வந்தனர். சடையப்ப பிள்ளையாரது சைவ வேளாள குடும்பம் தமிழ் நாடெங்கும் மிகப் பிரசத்தி பெற்ற தொன்றாம். சடையப்ப பிள்ளையார் கணக்கிடப்படாத செழுஞ் செல்வமுடையா ரென்றும், இவர் தங் காலத்திருந்த சோழ மன்னனுக்குப் பெருவிருந்தியற்றி னாரென்றும், அவனோடு மைத்துனக் கிழமை பூண்டு அவனாற் பெரிதும் பாராட்டப்பட்டன ரென்றும், தமிழ்ப் புலவர் பலர்க்கும் பொருட்டிரள் நல்கி அவராற் றமிழ்ப் பாஷையை மிக வளம்படுத்து வந்தன ரென்றும், இளம் பருவத்தே மிக வறுமைப்பட்டுத் தம்பால் எய்திய கம்பர்க்கு ஊண்கொடுத்து உடைகொடுத்துக் கல்வியறிவு கொடுத்துப் பாதுகாத்தன ரென்றும் பலவாகத் தமிழ் நாடெல்லாம் அவர் பெரும் புகழை மீக் கூறுகின்றது. இங்ஙனஞ் சடையப்ப வள்ளலார் குடும்பம் ஞானநிலை கூடுதற்குக் கருவியான தமிழ் மொழியைப் பல்கச் செய்தன் மாத்திரையில் அமைதி பெறாது, அந்த ஞான நிலையினையும் விளக்குதற்கு விரும்பின குறிப்பைப் புலப் படுத்தவே அச்சடையப்ப வள்ளலாரின் அருமைப் புதல்வியார் மணிவயிற்றில் மெய்கண்டதேவர் திருவவ தாரஞ் செய்தருளு வாராயினர். இவர் திருவவதாரஞ் செய் தருளிய வரலாறு சிறிது கூறுதும்.

சடையப்ப பிள்ளையார் அருமைப் புதல்வியாரும் அவர் காதற் கொழுநன் அச்சுதன் என்பாரும் திருப் பெண்ணா கடத்தில் மிக ஒருமித்து வாழ்ந்து வருநாளில் தமக்கு நீண் நாளாகப் புதல்வர்ப்பேறு வாயாமைகண்டு மனம் வருந்தி, “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன், நன்கல நன்மக்கட்பேறு என்ற திருவாக்கை (குறள் (குறள் 60) 60) சிந்தித்துப் புதல்வர்ப் பெறேமாயின் நம் இல் வாழ்க்கை வறிதாமன்றே! என் செய்வேம்! ஈசா! என எண்ணி எண்ணி வாடுவர். இங்ஙனம் வாடுவார்க்கு ஒருநாட் சடுதியில் ஒரு கருத்துத் தோன்ற அவர் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/82&oldid=1583135" இலிருந்து மீள்விக்கப்பட்டது