பக்கம்:மறைமலையம் 15.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

53

வள்ளலார் அருமைத் திருமாளிகையிலேயே வசிப்பாராயினார். து முதல் முதல் சுவேதவனப் பிள்ளையார்க்கு பிள்ளையார்க்கு நிலையான இருப்பிடம் திருவெண் ணெய் நல்லூராகவே விளங்கிற்று. பிள்ளையார்க்கு நன் மாமனும் பெற்றோரும் பிள்ளையார் திருமேனிப் பாதுகாப்பிற் பெரிதுங் குறிப்பு டையராயினார்.

வேறு

ப்

இவ்வ வ்வாறு பெருந்தவமாற்றிய நன்மாமற்கும் பெற்றார்க் கும் மற்றார்க்கும் பெருங்களிப்புச் சிறக்க நல்கியவாறே சுவேதவனப் பெருமான் கண்ணிமைபோற் போற்றப் பெற்றுவளர்ந்துவர, அவர்க்கு மூன்றாம் ஆண்டு நிரம்பிற்று. இவர் ஏனைச்சிறுமகா ரோடுகூடித் திருவிளையாட்டுச் செய்யுங்காலத்தும் அவர் மற்றவர்போல் ஒரு குறிப்புமின்றித் தோன்றியவாறெல்லாம் விளையாடாது, ாது, ஒரு ஒரு புறத்தே அமைதியோடு மிருந்து ஆழ்ந்த சிந்தனையுடையராயிருத்தலும், அதுவிட்டால் மணலைக் குவித்து அதன்மேல் இலையைக் கிள்ளி யிடுதலுஞ் செய்திடுவர். இங்ஙனம் இவர் விளையாடா நிற்ப ஒருநாள் தெரு வழியே சென்ற பரஞ்சோதி முனிவர் என்னும் ஆன்றமைந்ததுறவி ஒருவர் இப் பிள்ளையை நோக்க அவருள்ளம் இப்பிள்ளை வயப்பட்டு ஒருங்கி நின்றது. நின்றதாக அவர் சிந்திப்பார் “என்னை! இப்பிள்ளை யைக் காண்டலும் என்னுள்ளம் செல்லாது இதனிடத்தே நிலை பெறுகின்றது; இப்பிள்ளையின் றோற்ற மோ சிவபெருமான் றிருவருட் டோற்றம்போ லிருக்கின்றது; இஃதிக் குழந்தைப் பருவத்திலேயே அமைதியும் ஆழ்ந்த சிந்தனையுமுடையதா யிருக்கின்றது, மணலைக்குவித்து அதன்மேற் பச்சிலையைக் கிள்ளியிடும் இதன் செயலை நோக்கினால் இது சிவலிங்க பூசை செய்யுங் குறிப்புடைய தாய்த் தோன்றுகின்றது; இஃது ஏனை மகார்போற் சாமானியமாக லின்றித் தெய்வீக விசேடமுடைத் தாய்க் காணப்படுகின்றது" என்று அதனருகிற்போய் அருட் கடைக்கண்ணோக்கஞ் சாத்தி அதன் சிரத்தின்மேற் றன் கரத்தைச் சேர்த்தி அனுக்கிரகித்தார்; அனுக்கிரகித்தலும் முன்காணப்படாது மறைந்து நின்ற தீச்சுடர் சூரியனைக் காண்டலும் சூரியகாந்தத்தில் விளங்கித் தோன்றினாற் போல, அப்பிள்ளையார்மாட்டு அந்தரங்கமாய் நின்ற சிவஞான மனைத்தும் ஒருங்கெழுச்சி பெற்று விளங்குவ தாயிற்று. விளங்கவே, சுவேதவனப் பெருமான் பரஞ்சோதி முனிவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/86&oldid=1583139" இலிருந்து மீள்விக்கப்பட்டது