54
❖ - 15❖ மறைமலையம் – 15
என்னுஞ் சிவஞானியார் அருமை பெருமை யுணர்ந்து வந்தனவழி பாடியற்ற, அம்முனிவர்பெருமான், முன்னே இறைவன் திருப் பெருந்துறையிற் குருந்தமர நிழலிற் குரு வடிவங்கொண் டழுந்தருளி மாணிக்கவாசகருக்குப் பன்னிரண்டுகூறாய் உபதேசித்தருளிய சிவஞானபோதம் என்னும் ஞான சாத்திரத்தை இப்போதிவர்க்கு உபதேசித்து 'அன்பனே! இப் பன்னிரண்டு விஷயங்களையும் பன்னி ரண்டு சூத்திரங்களாகச் செய்து இவ்வுலகமெங்கும் ஞானத் துறை விளக்கி ஆன்மாக்களை உய்வித்திடுக” என்று கட்டளை யிட்டுப் போயினார்.
66
.
ஞானாசிரியன் கட்டளையிட்ட வண்ணமே சுவேத வனப் பெருமான் என்னும் அப்பிள்ளையார் அப்பன்னி ரண்டு விஷயங்களையும் பன்னிரண்டு செந்தமிழ்ச் சூத்திரங் களாகச் செய்து, அச்சூத்திரங்கள் ஒவ்வொன்றற்கும் அதி கரணங்கள் வகுத்துக் கருத்துரையும் வாத்திகப் பொழிப்பு ரையும் உதாரணப்பாட்டுக்களும் இயற்றி அச்சிவஞான போத நூற்பொருள் யார்க்குந் தெற்றென விளங்குமாறு விரித்து உரை நிகழ்த்துவாராயினார். தேமழலை மொழி ததும்புந் திருவாயால் மூன்றுவயதுக் குழந்தையாயிருக்கும் சுவேதவனப் பெருமான் அரிய பெரிய ஞான நுண் பொருள்களைத் தெள்ளத்தெளிய விளக்குதலைக் கண்ட அவர் பெற்றோரும் தாய் மாமனும் பிறரும் வரம்புகடந்த வியப்பும் உவப்பும் எய்தினார். மிகச்சிறு பிள்ளையான நம்பெருமான் உரை முடிபுக் கெட்டாத அறிவுநூற் பொருள்களை விரித் துபந்நியசிக்கின்றார் என்பது கேட்டலும், தமிழ் நாட்டி லுள்ள சான்றோரும், கற்றாரும், துறவோரும், பிறரும் பெரிதும் வியப்படைந்து பிள்ளையார் ஞானோ பந்நியாசங் கேட்டற்பொருட்டுப் பல திசைகளி னின்றும் வந்து குழுமினார். பிள்ளையார் எழுந்தருளிய வெண்ணெய் நல்லூர் ஞானமகள் நடமிடும் ஞான அரங்காயிற்று; சடையப்ப வள்ளலார் திவ்விய மாளிகை ஞானக்களஞ்சியமாய் விளங் கிற்று. சுவேதவனப்பெருமா னாகிய பிள்ளையாரோ உபந்நி யாசங் கேட்கவரும் சான்றோர்க்கெல்லாம் பொருள்மயக்கந் தீர்த்து உண்மைப்
திரு