56
❖ 15❖ மறைமலையம் – 15
66
ஞானோ பதேசங் கேட்டலும், தம்முடைய சீடர்களும் ஆங்கவர்போ லடக்க வொடுக்கமாயிருந்து உண்மைப்பொரு டளிதலுங் கண்டு பொறாராய் மனம்புழுங்கினார். தம்முன்னாசிரியரான சகலாகமபண்டிதர் வரக்கண்ட சீடரெல்லாரும் எழுந்திவர்க்கு உபசாரஞ் செய்தனர். உடனே, அருணந்தி சிவாசாரியார் செருக்கால் வெகுண்டு “நீவிர் இப்போது யாது உசாவு கின்றீர்கள்?” என்று கேட்ப, அவர்கள் “ஆணவமல விசாரஞ் செய்கின்றேம்” என்றார்கள். சிவாசாரியார் நம் சுவேதவனப் பிள்ளையாரை வினாக்கள் கேட்டு வெற்றிகொளல் வேண்டு மெனக் கருதிப் பிள்ளை யாரை நோக்கி ஆணவமலத்தின் சொரூப இலக்கணம் யாது?” என்று வினாவினார். அதுகேட்ட பிள்ளையார் சிவாசாரி யாரது அதி தீவிர பக்குவத்தினையும், அவரிப்போது அழுக்காற்றால் செருக்குற்று வினாவுதலையுங் கண்டு இரங்கி, அவரை அனுக்கிரகித்து ஆட்கொளத் திருவுளங் கொண்டு தம தருட்கடைக்கண் நோக்கால் அவர்க்குள்ள ஆணவவலியை அடக்கி ஆணவமல சொரூபமாவது இப்போது நீர் கேள்வி கேட்டு நிற்குநிலையே தான் என்னுங்குறிப்புத் தோன்ற அவர் முடிமுதல் அடிகாறும் ஒருமுறை நோக்கிப் பின்வாளா விருந்தனர். சகலாகம பண்டிதராகிய அருணந்தி சிவாசாரியார் எல்லா ஞான நூற்பொருளும் முற்றுணர்ந்து அறியாமை தேயப்பெற்று அதி தீவிர பக்குவமுடையராயிருத்தலில், பிள்ளையார் சாத்திய அருட் கடைக்கண் ணோக்கமானது தீப் பஞ்சுத் துய்யிற் படுமாறுபோல் மிக இலேசில் அவரறிவிற் றோய்ந்து அவரைப் பரிசுத்தஞ் செய்ததாகச் சிவாசாரியாரும் பிள்ளையார் எல்லாம் வல்ல தெய்வீகஞானாசிரியராம் உண்மை உணர்ந்து, தாங் கேட்ட வினாவே ஆணவ சொரூப மாதல் குறிக்கப்பட்ட நுணுக்கத்தை நினைந்து நினைந்துருகி அடியற்ற பனைபோல் பிள்ளையார் திருவடித் தாமரைகளில் விழுந்து “எங்கள் சிவஞானச் செல்வமே! புழுத்தலைநாயிற் கடைப்பட்ட என்னையுமாட் கொள்ள வெழுந்த என் அருட்குருமணியே, அடியேன் செய்த பிழையைப் பொறுத் தருளல் வேண்டும். என்னையும் ஆட் கொண்டருளி உய்வித் தருளல்வேண்டும்.” என நாத் தழுதழுப்ப மெய்ந் நடுங்கக் கண்ணீர் ஒழுக மொழிந்து கிடந்தார். பிள்ளையார் “அன்பரே!
L