58
❖ 15❖ மறைமலையம் - 15
அ
செய்தனரென்றும் ஒருசாரார் உரைப்ப. முன்னோரொருவர் ஒன்று எழுதி வைத்தனராயின் அது பொருந்துமா பொருந் தாதா என்று ஆராய்வதின்றி அவர் எழுதியதனை அங்ஙனமே கூறிப் போவதே நம்மனோர்க்கு வழக்கமாயிருக்கின்றது. மற்றுநம் பெருமான் சுவேதவனப் பிள்ளையார் அருளிச் செய்த சிவஞானபோத சூத்திரங்கள் பன்னிரண்டும் வடமொழிச் சிவஞானபோதத்தின் மொழிபெயர்ப்புத்தாமாவென்று ஆராயப்புகுந்த வழி அவையிரண்டற்கும் பேதங்கள் பல காணப்பட்டமையால் அஃது அதன் மொழி பெயர்ப்பன் றென்பது துணிபாயிற்று. இனிவடமொழிச் சூத்திரங்கள் பன்னிரண்டாயினும் இரௌரவாகமத்திற் பாசவிமோசனப் படலத்துளவாவென்று அவ்வாகமம் வல்லாரை உசாவிய வழி, அவை ஆண்டிருத்தற்கு ஓரியைபுமில்லையென்றும், அப் படலத்தில் அப்பெற்றியவாஞ் சூத்திரங்கள் சிறிதுங் காணப்பட வில்லையென்றும் அவர் கூறுகின்றார். இன்னும் மெய்கண்ட தேவர் அருளிச்செய்த சிவஞானபோதம் மொழி பெயர்ப்பு நூலாயின், அதற்குச் சிறப்புப் பாயிரம் உரைத் தருளிய சகலாகம பண்டிதரும் மெய்கண்ட தேவர்க்குப் பிரதம சீடருமான அருணந்தி சிவாசாரியார் அச்சிறப்புப் பாயிரச் செய்யுட்கண் அதுமொழி பெயர்ப்பு நூலென்று கூறிடுவார்; மற்று அவர் அதனை அவ்வாறு கூறாது,
“மயர்வறநந்தி முனிகணத்தளித்த உயர்சிவஞானபோத முரைத்தோன்
பெண்ணைப்புனல்சூழ் வெண்ணெய்ச்சுவேதவனன் பொய்கண்டகன்ற மெய்கண்டதேவன்"
என்று அதனை முதனூலாகவே யியற்றியருளினாரென்று கூறுதலாலும், சிவஞான சித்தியார் பாயிரத்தும்,
“போதமிகுத்தோர் தொகுத்த பேதைமைக்கே பொருந்தினோரிவர்க்கன்றிக்கதிப்பாற் செல்ல ஏதுநெறியெனுமவர்கட்கறியமுன்னாள்
இறைவனருணந்தி தனக்கியம்பநந்தி கோதிலருட்சனற்குமாரர்க்குக் கூறக்
குவலயத் தினவ்வழியெங் குருநாதன் கொண்டு