பக்கம்:மறைமலையம் 15.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

தீ தகலவெமக்களித்த ஞான நூலைத்

தேர்ந்துரைப்பன் சிவஞானசித்தியென்றே”

59

என்று அவ்வாறே கூறுதலாலும், சிவஞானபோதஞ் சிவஞான சித்தியென்னும் முதனூல் வழிநூல்கட்குச் சார்பு நூலியற்றிய உமாபதி சிவாசாரிய சுவாமிகளும் சிவப்பிரகாசப் பாயிரத்தில் "தேவர்பிரான் வளர் கயிலைக்காவல்பூண்ட திருநந் தியவர்கணத்தோர் செல்வர்பாரிற் பரவியசத்திய ஞானதரிசனிகளடிசேர்

பரஞ்சோதிமாமுனிகள் பதியாய்வெண்ணெய் மேவியசீர் மெய்கண்ட திறலார்மாறா விரவுபுகழருணந்தி விறலார்செல்வத் தாவிலருண்மறைஞான சம்பந்தரிவரிச் சந்தானத் தெமையாளுந் தன்மையோரே” “தெரித்தகுருமுதல்வருயர் சிவஞானபோதஞ் செப்பினர்பின்பவர் புதல்வர் சிவஞானசித்தி விரித்தனர் மற்றவர்க டிருவடிகள்போற்றி விளம்பியநூலவை யிரண்டும்விரும்பிநோக்கிச் கருத்திலுரை திருவருளு மிறைவனூலுங் கலந்துபொதுவுண்மை யெனக்கருதியானு மருத்திமிக வுரைப்பன்வளர் விருத்தநூறு மாசில்சிவப்பிரகாச மாகுமன்றே'

6

எனவும்

எனவும் தமது மெய்கண்ட சந்தானமரபும், அச்சந்தான நூல் வந்த வரலாறும் நன்கெடுத்துக் கூறுதலாலும், சந்தானா சாரியா ராதல் அவர்க்குப்பின் அம்மரபில்வந்த சீகாழிச் சிற்றம்பல நாடிகள் தாயுமானசுவாமிகள் முதலியோராதல் அது மொழி பெயர்ப்பு நூலென்று யாண்டு முரைப்பக் காணாமையானும், தமிழிற் காணப்படும் அரியபெரிய நூல்களையெல்லாம் வட மொழியிலிருந்து வந்தனவென நாட்டுதற்கு வடமொழி மாட்டுத் துரபிமானம்வைத்தார் சிலர் தமக்குத் தோன்றியவாறு நம் பெருமான் மெய்கண்ட தேவரருளிய முழுமுதனூலையும் மொழி பெயர்ப்பு நூலென்று கூறியவுரை போலியுரையா மென்று கடைப் பிடிக்க. தலபுராணங்களெழுதுவோரெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/92&oldid=1583145" இலிருந்து மீள்விக்கப்பட்டது