இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* முன்பனிக்கால உபந்நியாசம்
61
பின்னர் மெய்கண்டதேவர் தாமியற்றியருளிய சிவ ஞான போதப்பொருள் விளக்கவிரிவுரைபோல ஒரு நூலியற்று கவென்று தம்பிர தமசீடர் அருணந்திசிவாசாரிய சுவாமிகட்குக் கட்டளையிட்டாராகலின் அவரவ்வாறே சிவஞானசித்திப் பெயரியவழிநூல் அமைத்தருளினார் என்க.
பின்னர் அருணந்திசிவனார் சிவஞானபோதம், சிவஞான சித்தி இரண்டனையும் தம்பிரதமசீடர், திருக் கடந்தை
மறை ஞானசம்பந்தர்க்குபதேசித்தருளினார். பின்னர்
மறைஞான சம்பந்தர் அவ்விரண்டனையும் திருக் கொற்றங்குடி உமாபதிசிவ னார்க்கறிவுறுத்தருள உமாபதி சிவனார் அவையிரண்டன் பொருளைவிரித்துச் சிவப்பிரகாச முதலிய எட்டு ஞான நூல்களருளிச் செய்தனர். இங்ஙனம் வராநின்றது மெய்கண்ட பரம்பரை என்க.