முன்பனிக்கால உபந்நியாசம்
ஆ
டு
63
உயர்திணை, அஃறிணைப் பொருட்பெயர்களோடு சேர்ந்துநின்ற வழியே யாம். இனி யிஃது இன்மைப்பொருளை யுணர்த்துதல், அஃறிணைப் பண்புச்சொற்களோடு இணங்குகின்ற வழியே யாம். ஃது அமலம் அகளங்கம் அயோக்கியம் அசலம் என்றற் றொடக்கத்தனவற்றால் அறியப்படும்; இவை முறையே மலம் இன்மை களங்கம் இன்மை யோக்கியம் இன்மை சலனம் ன்மை என்னும் பொருள்களையுணர்த்தா நிற்கும். அஃறிணைப் பாருளுள்ளும் இவை குணத்தை யுணர்த்திப் பின் உயர் திணைப் பொருளுக்கு அமலன் அகளங்கன் அயோக்கியன் அசலன் என்று பெயராங்கால் அக் குணங்களை யில்லாதவன் என்றே பொருள் இ குறிக்கும். ஆகவே, இவை அஃறிணையுள்ளும் உடைமைப்பொருளான குணமின்மையைக் குறிக்கவேவருவன வாமாதலால், அவ்வுபசர்க்கம் இன்மைப் பொருளுணர்த்தும் வழியெல்லாம் பண்புச்சொற்களோடு மாத்திரம் இணைந்து வருமென்றல் துணிபொருளாம். இனிமேலே குறிக்கப்பட்டவாறு து பிராமணன் முதலான பொருட்பெயரை யறிவிக்குமிடத் தல்லாம் அண்மைப் பொருளை யுணர்த்து தென்பதூஉம் இதனோடு இயைவித்து அறியற்பாற்று. இனிக் பெயருள்ளுங் குணிப்பெயருள்ளும் ஒன்றனோ டொன்று மறுதலைப்பட்டு இரட்டைமொழிகளாய் நிற்பன வற்றுள் ஒன்றனைச் சுட்டு மிடத்து இந்நகர வுபசர்க்கம் மறுதலைப் பொருள் பயப்பதாய் நிற்கும். இது அசத்தியம் அஞ்ஞானம் அசாதரணம் அசேதனம் என்றற் றொடக் கத்தன வற்றால் தெற்றெனத் தெளியப்படும். "இவை முறையே சத்தியத்தோடு மறுதலைப் பட்ட அசத்தியத் தினையும், ஞானத்தோடு மறுதலைப்பட்ட அஞ்ஞானத் தினையும், சாதாரணத்தோடு மறுதலைப்பட்ட அசாதார ணத் தினையும், சேதனத்தோடு மறுதலைப்பட்ட அசேதனத் தினையும் நன்குணர்த்துவனவாம். ச்சொற்கள் மக்களி ரட்டை மர மிரட்டை காயிரட்டை போல் ஒன்றற் கொன்றி னமாய் இரண்டேயாய் நிற்றலால் இவற்றுள் ன்றனை யொரு சொல்லுணர்த்தவே, ஏனையதனை அச் சொல் லோடிணைந்த உபசர்க்கும் உணர்த்தி இவ்வாறு மறுதலைப் பொருட்கண்ணே வருவதாகும். இனி உண்மை யான் னி நோக்கும் வழி இம்மறுதலைப்பொருளும் மேலே காட்டிய அண்மைப் பொருட்கண்ணே அடங்கு வதன்றிப் பிறிதில்லை.
குணப்