பக்கம்:மறைமலையம் 15.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

❖ - 15❖ மறைமலையம் – 15

துணியப் படும். இந்த நுண்பொருள் வடநூல் தென்னூல் முடிபு முழுதும் ஒருங்குணர்ந் துரைஎழுதிய ஆசிரியர் சிவாக்கிர யோகிகள் சிவஞான சித்தியாருரையுள் அந்தகாரம் உள் பொரு ளென்றே நாட்டிய முடிபும் இக்காலத்துப் பௌதிக சாத்திர முடிபோடு பெரிதும் இணங்குகின்றது. இங்ஙன மாகலின், இதனுண்மை யறியாது கூறிய அன்னம் பட்டருரை ஈண்டைக்குச் சிறிதும் பொருந்தாதென்று துணியப் படும். இதுநிற்க.

அவ்வாறு மேற்காட்டிய முறையால் சத்தியம், ஞானம் என்பவற்றோடு மறுதலைப்பட்ட அசத்தியம் அஞ்ஞானம் என்பனவெல்லாம் உள்பொருள்களையே குறிப்பனவா

இன்மைப்பொருட்கண்

மாகலின் அவையெல்லாம் அடங்குமாறில்லை யென்பதும், அவை யன்மைப் பொருட் கண் அடக்கமுறுதலே பொருத்தமா மென்பதும், அதனான் மறுதலை.ப்பொருள் அன்மைக்கண் அடங்க ‘ந’ வென்னும் உபசர்க்கம் உணர்த்தும் பொருள் அன்மை யின்மை யென்னும் இரண்டேயாமென்பதும் பெறப்படுவன வாம் என்க.

இனி இந்நகரத்தா லுணர்த்தப்பட்ட அன்மை இன்மை யென்னும் இருபொருள்களுள் ஈண்டெடுத்துக் கொண்ட ‘அத்துவிதம்’ என்னுஞ் சொல்லின்கண் நகரம் எப் பொருளை உணர்த்துமெனின், அஃது அன்மைப்பொருளை யுணர்த்து வதாமென்க. ‘துவிதம்' என்பது இரண்டு என்னும்பொருளை உணர்த்துவது. இரண்டு என்னும் பொருட்பெயர் இருமை என்னும் பண்பைத்தானுடையதாக இருத்தலின், இவ்வெண்ணுப் பொருட்பெயர்மேல் வரும் நகரம் அன்மைப் பொருளை யல்லது, வேறு பொருளை உணர்த்தாது, என்னை? பண்பை யுணர்த்துங் குணப் பெயர்மேல் வரும் நகர மாத்திரம் இன்மைப் பொருளைக் காட்டுமென்று மேலே யுரைத்து விளக்கினா மாகலின் என்க. இன்னும் இவ் வெண்ணுப் பொருட்பெயர்மேல் வரும் நகரம் யாண்டும் அன்மைப்பொருளையே விளக்கு மென்பதற்கு அனேகம் என்னுஞ்சொல் ஒன்றில்லையென்னும் இன்மைப் பொருளைச் சுட்டாது ஒன்றல்லாத பலவென்ப தனைக் காட்டுதலே சான்றாமாகலானும், ஆசிரியர் சிவஞான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/99&oldid=1583152" இலிருந்து மீள்விக்கப்பட்டது