பக்கம்:மறைமலையம் 16.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

80

❖ LDM MLDMOшLD -16 →

டாயிர ரூபா வரும்படியுள்ள ஓர் அலுவலை அடிசனுக்குத் தந்தனர். இவர் பாடிய இப்பாட்டில் முன்னில்லாத ஒரு பெருஞ் சிறப்பு உளது. இவர்க்குமுன் படைத்தலைவர் களைப் புகழ்ந்து பாடிய பாவலரெல்லாருந், தாம் பாடுதற்குப் புகுந்த படைத் தலைவன் அளவற்ற போராண்மையு டையவனென்றும், அவன் தான் ஒருவனாகவே தன் ஒரு கையால் எண்ணிறந்த பகைஞரை வெட் வட்டி வீழ்த்தின வீழ்த்தினனென்றும் நடவாத பொய்யைப் புனைந்து கட்டிப் பாடுதலையே தொழிலாகக் கொண்டவர்கள்; மற்று அடிசனே, உண்மையான முறையைப் பின்பற்றிப், பின் நடக்கப் போகும் போரின் கூறுபாடுகளை அளந்தறிந்து, அவற்றிற்குத் தக்கபடியாகத் தனது படையை வகுத்தமைக்கும் ஆழ்ந்த அறிவின் திறங்களையும், எதிர்பாராத ஒரு பேரிடர் பகைஞராற் சடுதியில் நேர்ந்தவிடத்துச் சிறிதும் மனங்கலங்காமல் அமைதி யாய் நின்று அவ்விடருக்குத் தனது படையைத் தப்புவிக்குஞ் சூழ்ச்சிகளையுந், தாம் பாடுதற்கு எடுத்துக் கொண்ட படைத்தலைவன் உடையனதலையே சிறந்தெடுத்துப் பாடினார்.

இங்ஙனம் இப் பாசறையிருப்புப்பாட்டுப் பாடிய காலந் தொட்டு இவர்க்குத் திருமகள் நோக்கம் நன்கு வாய்த்தது. துவக்கத்தில் இவர் இங்கிலாந்தின் உதவி அமைச்சராயும், அயர்லாந்தின் முதல் அமைச்சராயும் ஏற்படுத்தப்பட்டார். பொருள் வருவாயை நிரம்பத் தரும் இன்னும் பல அலுவல் களிலும் அமர்ந்திருந்தார். 1703 ஆம் ஆண்டில் ஒரு காசுகூட இல்லாமல் வறுமைப்பட்ட இவர் 1711 இல், ஒரு நூறாயிர ரூபாவுக்கு நிலங்கள் வாங்கினாரென்றால், இடையே இவர் எவ்வளவு பொருள் வருவாய்க்கு இடமான அலுவல் களைப் பார்த்திருக்கவேண்டு மென்பதை யாம் கூறல்வேண்டா.

'பாசறையிருப்பு' என்னும் பாட்டிற்குப்பின், தாம் இட்டலி தேயத்தில் வழிச்சென்ற வரலாறுகளைப் பற்றி இவர் எழுதிய நூல் ஒன்று வெளிவந்தது. அஃது, இவர்தம் அழகியகல்வித் தேர்ச்சியினையும், அமைந்த மெல்லென்ற நகைச்சுவை காட்டுந் திறத்தினையும், அன்பும் அருளும் வாய்ந்த ஒழுக்கத்தினையும், இவருடைய நூல்கள் எல்லா வற்றிலுங் கனிந்து திகழும் பிடிவாதமில்லாத ஆழ்ந்த சமயவுணர்வின் கிளர்ச்சியினையும் இனிது விளங்கக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/105&oldid=1583533" இலிருந்து மீள்விக்கப்பட்டது