பக்கம்:மறைமலையம் 16.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

❖ LDMMLDMOLD -16 →

எண்ணங்கள்' போல்ப வற்றைப் பற்றிய சீர் திருத்த வுரைகளும், விழுமிய சமயக் கொள்கைகள் ஒழுக்க வகைகளைக் குறித்த மெய்யுணர்வுரைகளும் இவராற் பெரிதுஞ் சுவைக்க எழுதப்பட்டன. இவர் தொட்டுப் பேசாத பொருளில்லை. உயர்ந்தனவுந் தாழ்ந்தனவும் இவர் கையில் வந்தவுடன் உயர்ந்தபொருள் மேன்மேல் விளக்கம் எய்தியும், தாழ்ந்த பாருள் தன்னைத் தாழ்த்தும் இழிபொருட் கலப்பு நீங்கித் தூய்மையுற்றுந் திகழ்ந்தன. இனிய கருப்பஞ் சாற்றினைப் பெய்துவைத்த தங்கக் குழிசிபோல் இவரெழு திய கட்டுரை களெல்லாம் இனிமைமிக்குத் துலங்கின. இவரை யடுத்துத் தோன்றிய மாப்பெரும் புலவரான சாமுவேல் ஜான்சன், "பழக்கத்தோடு ஒட்டியதேனும் பரும்படி யல்லாததும், அழகிய தேனும் ஆடம்பரமில் லாததுமான ஓர் ஆங்கில உரைநடையிற் பழகிக்கொள்ள விழைகுவார் எல்லாரும் அடிசன் இயற்றிய நூல்களை இரவும் பகலும் ஓயாமற் பயிலல் வேண்டும் மொழிந்தது முழுதும் பொருத்தமேயாம். என்றாலும், அடிசனார் இயற்றிய செய்யுட்களினும், அவரு டைய உரைகளே சொலற்கரும் விழுப்பம் வாய்ந்தன வாகு மென்பதை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். ஈண்டு, மறைமலையடிகள் தமிழில் மொழிபெயர்த்த கட்டுரைகள் ஆறும் அடிசன் ‘ஸ்பெக்டேடரில்' எழுதிய சிறந்த கட்டுரைகளி னின்றுந் தெரிந்தெடுக்கப்பட்டனவாகும். இப் புதினத்தாளில் வெளியான 555 கட்டுரைகளில் அடிசனால் வரையப்பட்டவை 274. இத்தாளின் 555 இலக்கங்கள் மட்டும் வெளிவந்தன; 1712, டிசம்பர்த் திங்களில் இதுவும் நின்றுபோயிற்று.

என

1713 ஆம் ஆண்டில் அடிசன் ‘கேட்டோ’ (Cato) எனப் பெரிய நாடகக்காப்பியம் ஒன்றனை இயற்றி வெளியிட்டார். அஃது அவர் காலத்திற் சிறந்ததாகப் பாராட்டப் பட்டாலும் வரவர அதற்கு அச் சிறப்புக் குன்றியது. அடிசனாரின் இயற்கை யறிவாற்றல் நாடகக்காப்பியம் இயற்றுதற்கு ஏற்றதன்று. இந்நாடகத்தின் கதைப் போக்கில் இனிப்பு இல்லை. கதையில் வரும் மக்கள் மரப்பாவைகளையே ஒத்தனர். உயிரும் அவ்வ வர்க்கே யுரிய சிறப்பியல்புகளும் அம்மக்கள்பாற் காணப்பட வில்லை. இன்னும் இவர் இயற்றிய உரைகளுஞ் செய்யுட்களும் பல. எனினும், இவர் தம் பெரும்புலமையும் பெரும்புகழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/109&oldid=1583537" இலிருந்து மீள்விக்கப்பட்டது