பக்கம்:மறைமலையம் 16.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

91

இந்நாட்களின் இடையில், நாயகரவர்கள் இவர்க்குள்ள சைவசித்தாந்த நுட்பவறிவைப் பயன்படுத்தக் கருதிச், சீகாழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச்செய்த 'துகளறு போதம்' என்னும் நூலை இவர்பால் விடுத்து, அதற்கோர் உரையெழுது மாறு தூண்டினர். அதற்கிசைந்து இவர் அந்நூலின் நூறு செய்யுட்களுக்கும் விழுமியவோர் அருந்தமிழுரை வரைந்து அதனை நாயகரவர்கள்பாற் போக்க, அவர்கள் அவ்வுரையின் நுட்பத்தையுஞ், சித்தாந்தத் தெளிவையும் சொற்சுவை பொருட் சுவைகளையும் உற்று நோக்கி, "இவ்வுரை சிவஞான முனிவர் உரையோடு ஒப்பது” என்று வியந்துபேசி, அதனைத் தமது செலவிலேயே அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். இவர் அக்காலத்தே மாயாவாத மறுப்பாக ‘நாகை நீலலோசனி' யில் எழுதின கட்டுரைகளிற் சில, நாயகரவர்கள் செலவில் இவர் 1899 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘சித்தாந்த ஞானபோதம்' முதற் புத்தகத்தின் கஉ0 ஆம் பக்கம் முதல் அதன் முடிவு வரையில் அச்சிடப்பட்டிருக்கின்றன. இன்னும் அக்காலத்தே சென்னையி லிருந்த மாயாவாதி ஒருவர், தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த ‘திருக்குறளின்' முதற்செய்யுளை மாயாவாதக் கொள்கையின்பாற் படுத்தி ‘முதற்குறள் வாதம்' எனப் பெயரிய ஒரு புத்தகம் எழுதிவிடுப்ப, இவர் அதற்கு மறுப்பாக ‘முதற்குறள் வாத நிராகரணம்' எனப் பெயர் அமைத்த நூ லொன்றை வெளியிட்டார். இவ்வளவும் இவர் நாக பட்டினத்திலிருந்த எழுதியவைகளாகும்.

ஞான்று

அப்போதிவர்க்கு ஆண்டு இருபதரை.

இனி, நாயகரவர்கள் இவரை நாகையிற் கண்டு அளவ ளாவிச் சென்றதுமுதல் இவரைச் சென்னைக்கு வருவிப்பதிற் கருத்து மிகலானார். அஞ்ஞான்றுதான், நாயகரவர்கள்பாற் சைவசித்தாந்தமுணர்ந்த திரு. நல்லசாமிப் பிள்ளை என்பவர், 'சிவஞானபோதம்' என்னும் ஒப்புயவர்வற்ற விழுமிய சைவ சித்தாந்த முதல்நூலை ஆங்கிலமொழியில் மொழிபெயர்த்து வெளிப்படுத்தினார். அதனை வெளிப் படுத்தியபின், சைவ சித்தாந்த உண்மைகளை நன்கு பரவச் செய்தற் பொருட்டு அவர் ‘சித்தாந்த தீபிகை' அல்லது ‘உண்மை விளக்கம்' எனப்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/116&oldid=1583544" இலிருந்து மீள்விக்கப்பட்டது