பக்கம்:மறைமலையம் 16.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் 16

அவர்தஞ் கற்றத்தார் அவர்க்கேற்ற மணமகனைத் தெரிந் தடுத்து மணஞ்செய்வியாது, தமது சாதிக் கட்டுப்பாட்டிற் பிணிப்புண்டு, அவர்க்கு ஏலாத ஒருவனைக் கணவனாகப் பொருத்தினமையால் அவரது வாழ்க்கை காதலன்பின்பாற் பட்டு ஒரு வழிச்செல்லாதாயிற்று என யாம் மொழிந்ததனை மறுப்பான் புகுந்த அம் மறுப்புரைகாரர், மகளிர் தாமே கணவனைத் தெரிந்து கொள்ளும் முறை வேசிகளிடத்தும் அவரையொத்த வகுப்பாரிடத்துமன்றி, ஏனை யுயர்ந்த சாதியாரிடத்துப் பண்டும் இன்றும் நிகழவில் யென்கின்றார்.

ஆசிரியர் தொல்காப்பியனார்,

ஆரியர் நாட்டு

எண்வகை மணங்களுட் சிறந்த காந்தர்வமணத்தோடு ஒப்ப தான கா தன் மணமே பண்டைத் தமிழ்மக்களுள் நடைபெற்ற விழுப்ப முடைய தெனக் கொண்டு, அதனையே சிறந்தெடுத்து,

"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்

காமக் கூட்டங் காணுங் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே”

(களவியல், 1)

என்றருளிச் செய்தனர். இச் சூத்திரத்திற்கு உரைகண்ட நச்சினார்க்கினியரும் இவ் விழுமிய மணமே வேதத்திற்கும் உடம் பாடென்பது காட்டுவாராய், “வழக்கு நாடி” என்றலின் இஃதுலகிய லெனப்படும்; உலகத்துமன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின்.” என்று உரையுங் கூறினார். கூறவே, பண்டைத் தமிழ்மக்கள் மட்டுமேயன்றி ஆரிய மக்களுள்ளும் இளைய ஆடவரும் மகளிருந் தம்மில் ஒருவரையொருவர் காதலித்தே மணங் கூடினா ரென்னும் உண்மை இனிது விளங்கா நிற்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் வழிவந்த பண்டைத் தமிழ்ச்சான்றோரில் திருவள்ளுவர், நக்கீரர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்திகள் முதலான எல்லாத் தெய்வ ஆசிரியர்களுங் காதன் மணத்தை விதந்தெடுத்து அருளிச் செய்திருக்க, காதன் மணம் பண்டைக் காலத் துணர்ந்தோரில் நடக்கவில்லையென்று படுபொய்யு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/175&oldid=1583802" இலிருந்து மீள்விக்கப்பட்டது