பக்கம்:மறைமலையம் 16.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

213

அத்தகைய வரம்புகளுக்கு அகப்படாமற் சொல்லுவன பித்துப்பிடித்துப் பிதற்றுவார் சொற்களே யாகலின், அத்தன்மையவாம் பிதற்றுரைகளே பொருள் அறிதற்கு ஒருசிறிதும் ஏலாதனவாம். மற்று இலக்கண இலக்கிய அமைதியும் அறிவுநூல் வரம்பும் உடைத்தாய்ச் செந்தமிழ்வளம் நிரம்பித்துளும்பும் திருவாசகச் செழும் பாடல்களுக்குப் பொருள் தெளிதல் முற்றும் அரிதன்று. அவற்றின் சொற்கள் சொற்றொடர்களுக்குப் பொருள் தெளிதற்குப் பண்டை இலக்கண இலக்கியக் கருவிநூல்களும் சிவஞானபோதம் முதலான அறிவு நூல்களும் இருக்கின்றன; இவற்றைக் கொண்டு ஆராய்தற்குரிய தன்மையினைத் திருவருளுதவியாற் பெற்று விளங்கிவரும் நமது அறிவும் இருக்கின்றது.

இவை அத்துணையுங்கொண்டு அமைதியாய் ஆராயுங் கால் திருவாசகப் பொருள் நமக்கு விளங்காமற் போகாது. என்றாலும் பண்டைக் காலத்து வழங்கி இக்காலத்து முழுதும் வழக்கு வீழ்ந்து ஒருவாற்றானும் அறிதற்கு வாயில் இல்லாத சிலசொற்கள் சொற்றொடர்கள் குறியீடுகள் சரித்திரக் குறிப்புகள் சிற்சிலவும், மாணிக்கவாசகப்பெருமான் புறப் பொருள் உணர்வுவிட்டு அகத்தே தமதுணர்வினை மடக்கிச் சிவபெருமான் றிருவருளில் இரண்டறக் கலந்துநின்று நுகர்ந்து கூறியவாகலின் நம்மனோர்க்கு இந்நிலையிற் இந்நிலையிற் சிறிதும் விளங்காத பேரின்ப வான் பொருள்கள் சிற்சிலவும் திருவாசகத்திருமறையின்கண் ஆங்காங்கு உளவென்பது எவர்க்கும் உடன்பாடேயாம். அவை ஒழிய, மற்று எஞ்சி நின்றவைகள் நம்மனோர்க்குப் புலனாவனவேயாம். ஒருவாற் றானும் நம்மமேனார்க்குப் புலனாகாத ஒரு நூலே இயற்றினார் என்றால் அறிவும் இரக்கமும் அன்பும் நிறைந்த மாணிக்க வாசகப் பெருமானது அருட்பெருந் தகைமைக்குப் பொருந்தாமையின் அங்ஙனங் கூறுதல் பெரிதோர் ஏதமாம்

என்க.

டன்

அங்ஙனமாயினும், திருவாசகத்தின்கட் பொ ரு ள் ணரப்படாதனவும் சிற்சில ஆங்காங்குளவென்று உ படுதலின், ஒரு நூற்பொருள் முழுதும் உணரப்படுதல் இயலாதிருக்கையில் அந் நூலுக்கு உரையெழுதப் புகுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/238&oldid=1583989" இலிருந்து மீள்விக்கப்பட்டது