பக்கம்:மறைமலையம் 16.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மறைமலையம் 16

மேற் குறிப்பிட்ட நண்பர் சென்ற ஆண்டு வெளியிட்ட சிறுசுவடியிற் கண்ட சிலவற்றைக்கண்டு பிறர் மயங்காமைப் பொருட்டு, அவை தமக்குச் சுருக்கமான விடைகள் ஈண்டளிக்க லாயினேம்.

அச் சிறு சுவடிக்குப் புகழ்ச்சியுரை எழுதிய புலவர், யாம் சைவவேடம் பூண்டு சைவநூல் வரம்பை அழிக்கின்றேம் என்றும், சைவநூற் கொள்கை எமக்குப் பொருந்தாதெனக் காணப்படின் யாம் அச் சமயத்தைவிட்டு வேறு சமயம் புகுதலே நன்றென்றும், அங்ஙனஞ் செய்யாது சைவத்துள்ளேயே நின்று காண்டு அதற்கு மாறானவற்றைச் செய்தல் எந்தமக்கே நாணத்தை உண்டாக்கற் பாலதென்றும் எமக்கோர் அறிவுரை கூறினார்.

சைவசமயக் கொள்கை பொருந்தாதெனக் கண்டே மாயின் யாம் வேறு சமயம் புகுந்திருக்கலாம்; இந்நண்பர் உரையைக் கேட்டுத்தான் யாம் அது செய்தல் வேண்டுமெனக் காத்திரேம். தாம் வயிறு பிழைக்கும் பொருட்டுச் சைவ சமயப் பெயராற் பிறர் கட்டிவைத்த பொருந்தாப் புராணப் பொய்க்கதைகளே சைவசமயத்தின் உண்மைபோலும் என நினைந்து அதனை அருவருத்துக் கூட்டங் கூட்டமாய்க் கிறித்துவசமயம் புகுந்தவர்களெல்லாம்

இப் புலவர் சொல்லைக் கேட்டுப் புகுந்தவர் அல்லர். 'எங்கள் சைவ புராணங்களிற் சொல்லிருப்பவைகளை அப்படியே நம்பினால் தான் நீங்கள் சைவர்கள்; இல்லாவிடின் நீங்கள் எல்லீரும் கிறித்துவம் மகமதியம் முதலான பிறசமயங்களிற் புகுந்திடுதலே நன்று. எமது சைவசமயத்தில் நின்று கொண்டு எம்முடைய புராணப்பொருள்களை நம்பாமல் அதனைப் பழித்தல்

கூடாது,

ாது,' என்று இந்தப் புலவரைப்போல இன்னும் சிலர் தோன்றி, இத்துணை நுட்பமான அறிவுரையைச் செய்து வந்திருப்பராயின், கிறித்துவப் பாதிரிமார்க்கு இவ்வளவு பொருட்செலவும் பெரு முயற்சியும் நேர்ந்திரா.

மிக எளிதிலே கிறித்து மதம் எங்கும் பரவியிருக்கும்; சைவ சமயம் வேரோடு அழிந்து போயிருக்கும். இத்தகைய சைவப் புலவர் பலர் தோன்றாதது கிறித்துவம் முதலான புறச்சமயத்தின் சோமநாதத்தில் இருந்த சைவநூற்

தவக்குறைவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/271&oldid=1584030" இலிருந்து மீள்விக்கப்பட்டது