பக்கம்:மறைமலையம் 16.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் 16

ஒவ்

அவ்வாறு அவர்களை வணங்காது ஒழிவது, சிவபிரான் கற்பித்த சொல்லைப் பிழைத்து நடந்த பெருந் தீவினையாய் முடியாதோ! அத் தேவர்களைப் பாடிய இருக்குவேதப் பாட்டுகளைச் சிவபிரானே அருளிச் செய்தது உண்மையாயின், அச் சிவபிரானே முழுமுதற் கடவுளாய்க் கொள்ளாமல் அவரால் வழுத்தப் பெற்ற தேவர்கள் வ்வொரு வரையுமன்றோ முழுமுதற் கடவுளாய்க் கொள்ளல் வேண்டும்! தம் தெய்வங் கற்பித்த முறையைப் பின்பற்றாது தாம் சிவபிரான் ஒருவனையே வழுத்தலானது சைவசமயாசிரியர்க்கு ஆசிரியன் சொற்பிழைத்த பெருங் குற்றமாய் முடியாதோ? சிவபிரான் இருக்கு வேதவுரைகளை இயற்றியது வாய்மையே யாயின், அவனால் வழுத்தப்பட்ட இந்திரன் முதலியோரை உயர்பெருங் கடவுளரெனக் கொள்வதா, சிவபிரான் உரையொடு முரணிச் சிவபிரானையே முழுமுதற் கடவுளென்று கொண்டு வழுத்திய சைவசமய குரவன்மார் உரையினை மெய்யெனக் கொள்வதா ஆராய்ந்து உரைமின்! இருக்குவேதப் பாடல் களைச் சிவபிரான் வாய்மொழியென ஏற்றஞ் சொல்லப் போய்ச் சிவபிரானது முழு முதற்றன்மைக்கு இழுக்குண்டாக அவனுக்குமேற் கடவுளர் பலரை உயர்த்துப் பிழைபடுதலோடு சிவபிரான் மொழிக்கும் சைவசமய குரவன்மார் மொழிக்கும்

முரண் உண்டாம் வழியினும் மயங்கச் செலுத்தி இவ்வாறெல்லாம் பெருங் குழறுபடைக்கு இடஞ் செய்வார்தம் உரைகள் தாம் சைவசமயத்தின் வரம்பைப் பாதுகாப்பன போலும்! சிவபிரானது முழுமுதற்றன்மைக்கும், சைவசமய ஆசிரியரின் அருண்மெய் யுரைகட்கும் வடுப்படாமை, இருக்கு வேதப் பாடல்களிற் பெரும்பாலான சிற்றறிவுடைய ஆரியப் பழம்புலவரானும், சிறுபாலன தமிழ்ச் சான்றோ ரானும் இயற்றப்பட்டவையாம் என்று உண்மையை யுள்ள வாறு எடுத்துக்கூறிய எமதுரை சைவ வரம்பைத் தகர்த்து விடுவ தாமோ! ஐயகோ! இத்தகைய மயக்கப் புல்லுரை நிகழ்த்துவார் தாமும் சைவ சமயம் உயர்ந்தவராய்த் தம்மைத் தாமே புகழ்ந்து ரைத்துக் கொண்டு ஆரவாரம் புரிதலும் அவராற் சைவ சமயத்துக்கு நேரும் இழிபினை உணர்ந்து பார்க்கமாட்டாத வெள்ளறிவினார் அவரோடு ஒருங்கு கூடிக் கொண்டு எம்மைப் L பழித்தலும் எமது மெய்யுரையினைச் சிறிதும் அசைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/281&oldid=1584042" இலிருந்து மீள்விக்கப்பட்டது