பக்கம்:மறைமலையம் 16.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் 16

அறங்களையே செய்வாராயினும் இறைவனே நினையாராயின் அவர்தம் அந் நல்வினைகளுந் தீவினைகளேயாதல் திண்ணம். தனாலன்றோ இறைவனை நினையாத மீமாஞ்சகர், பௌத்தர், சமணர் முதலியோர் செய்யும் அறங்களும் மறங்களாய் ஒழிந்தன. ஆகவே, மகளிரும் அவரது காதலின்பச் சேர்க்கையும் ஆடவர்தம்மை மென்பதப்படுத்தித் தூயராக்கி அவரை றைவனது திருவடிப் பேரின்பத்தில் உய்க்குமே யல்லது அதற்கு மாறாய் நில்லாதென்று நுனித்து உணர்க. அற்றேல், ஆன்றோர் சிலர் மகளிரின்பத்தைப் பெரிதும் இகழ்ந்து பேசிய தென்னையெனின்; இறைவனை நினையாதார் நுகரும் எல்லாவகை இன்பங்களும் இழிக்கற் பாலனவே யாதலின், அதுபற்றி இம்மையின்பங்களுட் சிறந்த அதுவும் கடவுள் நினைவோடு நுகரப்படாத வழி அங்ஙனம் இழித்துரைக் கற்பாலதேயாம். அதுபற்றி மெய்யன்பர் நுகரும் இன்ப நுகர்ச்சியும் இகழற்பாலதன்றென்று காண்க. இவ்வாறு கடவுள் வகுத்த வகைகளையும், அவனது அருள் நோக்கத் தையும் பகுத்துணர்ந்து பார்த்தல் விடுத்து, வெற்றாரவாரமாய் மாயாவாதிகள் பற்றறுந்தார்போற் கூறும் பகட்டுரை கேட்டுச், சுந்தரமூர்த்தி நாயனாரை வஞ்சமாய் இகழ்ந்துரைக்கு குறிப்பால், அவர் காம இன்பத்தின் விழைவால் உயர்ந்த தெய்வப் பிறப்பை இழந்து, இழிந்த மக்கட்பிறவியை எய்தினார் எனக் கட்டிவிட்ட பொய்க்கதை சைவசித்தாந்த உண்மையுணர்ந்தார் கழகத்திற் றலைக் காட்டாதென்றெழிக. இன்னோரன்ன பொய்க்கதைகள் சைவ சித்தாந்தகத்திற்குப் பெருந் தீதுபுரிதலை ஆய்ந்துபாராத சைவர் சிலர் இக் கதைகளை நம்பாதுவிட்டால் நமது சைவம் நிலைபெறாது போமேயென்று பதைபதைத்தல் அறிவுடை யார்க்கு

நகையினையே தருகின்றது. அதுகிடக்க.

இனி, 'நாட்டுச்சிறப்பு' ஆசிரியர் சேக்கிழார் அருளிச் செய்தது அன்று என்னும் எமது உரையை மறுக்கப்புகுந்த நேயர், சோழநாட்டிற் பிறந்தருளிய நாயன்மார்தம் ஊர் நகர் முதலியவற்றின் சிறப்புக்களை அவ்வந் நாயன்மார் வரலாறு ஒவ்வொன்றிலும் ஆசிரியர் விரித்து ஓதாமையின், அவற்றிற் கல்லாம் பொதுவாகவைத்து நாட்டுச்சிறப்பு என ஒன்று முதற்கண் அருளிச் செய்வாராயினர் எனக் கூறினார். உள்ளதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/311&oldid=1584072" இலிருந்து மீள்விக்கப்பட்டது