பக்கம்:மறைமலையம் 16.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

❖ LDM MLDMELD -16 →

விரித்துப்பாடிய ஆசிரியர் மீண்டும் அவற்றைக் ‘கூறியது கூறல்’ என்னுங் குற்றம் உண்டாகப்பாடார் என்பதனை அறியாமற்போனார். ஓரிடத்து ஒருகால் ஓர் ஊர்க்குக் கூறிய அவ் வளங்களை மீண்டு மீண்டுங் கூறுதல் சுவை பயவாதென்பது கொண்டு, அங்ஙனந் தில்லைவாழந்தணர் புராணத்தில் அவைதம்மைக் கூறாது விட்டதேயல்லாமற், சோழ நாட்டிற் கெல்லாம் பொதுவாக நாட்டுச்சிறப்பு மொழிந்ததுபற்றி அதனை விட்டா ரல்லரென அந் நண்பர் உணரக்கடவராக! ங்ஙனமே, திருநீலகண்டருந் தில்லை நகரிற் பிறந்து அங்கிருப்பவராதலிற், சுந்தரமூர்த்தி புராணத்தில் ஓதிய நாட்டுவள நகர வளங்களை மீண்டும் திருநீலகண்டர் புராணத்தில் எடுத்து உரையாராயினர்.

இனி, இயற்பகை நாயனார் புராணத்தில் ‘மன்னு தொல் புகழ் மருதநீர் நாட்டு வயல்வளந்தர இயல்பினில் அளித்துப், பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து' எனச் சோழநாட்டின் மருதநில வளத்திற் கேதுவான காவிரியாற்றைச் சிறப்பித்துக் கூறிய அவ்வளவு போதாதோ? பிற்காலத்துப் புலவர்போல, உழுதல் எருப்பெய்தல் விதைத்தல் நாறு பிடுங்கிநடுதல் களைகட்டல் விளைந்தவற்றை அறுத்துப் போராக்கல் கடாவடித்தல் நெற்கொண்டு சேர்த்தல் விருந்தினர் சுற்றத்தாரொடு துய்த்தல் முதலியனவாக எவர்க்குந் தெரிந்த வைகளை வாளாவிரித்துப் பாடிக்கொண்டிருத்தல் எடுத்தபொருளைவிட்டு மற்றொன்று விரித்தல்' என்னுங் குற்றமாய், நாயனார் வரலாற்றை அறிதலில் விழைவு மிக்கு அதனைக் கற்கப் புகுந்தார்க்கு அயர்வு தோற்றுவித்தல் பற்றி ஆசிரியர் அதனை விட்டாரல்லது, முன்னரே பொதுப்பட நாட்டுச்சிறப்புக் கூறியது பற்றி அன்று L என்க. அஃது

6

க்குமாயினும், காவிரிப்பூம் பட்டினத்து நகரச்சிறப்பை ஆசிரியர் ஒரு சிறிதாயினுங் கூறாதுவிட்ட தென்னை யெனிற்; கரிகாற்சோழன் நிகரற்ற வெற்றிவேந்தனாய் அரசாண் காலத்தில் அவனால் ஆக்கப்பட்ட தலை நகராய்க் காவிரிப்பூம் பட்டினம் மிகச்சிறந்து விளங்கிற்று. அவ்வரசற்னுக்குப் பின் வந்த சோழ மன்னன் அதனை நன்கு பாதுகாவாமையின், அதிற் பெரும் பகுதி கடல்வாய்ப்பட்டு அழிந்தது; அது முதல் அந்நகர் சிறப்பின்றி யிருந்தமை கண்டே ஆசிரியர் சேக்கிழார் அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/317&oldid=1584078" இலிருந்து மீள்விக்கப்பட்டது