பக்கம்:மறைமலையம் 17.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

79

கட்டுரைத்துச் சொல்ல முடியாத பழமையுடையதாய், இத்தனைக் காலமாகியுந் தனது இளமைச் செல்வம் சிறிதுங் குன்றாததாய் உலவி வருகின்றது. தமிழைப்போலவே பழமை யுடையன வென்று சொல்லத்தக்க ஆரிய கிரேக்க இலத்தின் ஈரு அராபி சீனம் முதலான ஏனைய தேய மொழிகளெல்லாம் இப்போது உலக வழக்கத்தில் இன்றி இறந்தொழிய, நம் செந்தமிழ்மொழி எல்லாம்வல்ல இறைவனைப்போல் என்றும் இலங்குகின்றது.

இறவா

இளமைத்தன்மை வாய்ந்து

இவ்வுண்மையை, மனோன்மணீயத்தில்

“பல்லுலகும் பலவுயிரும் படைத்தளித்து துடைக்கினும் எல்லயறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பது போல் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலயா ளமுந்துளு உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாதுநின் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”

என்றுவந்த தமிழ்த்தாய் வணக்கச் செய்யுளிலுங் கண்டு கொள்க.

பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், இது மட்டும் என்றும் இளமையோடு விளங்குவது எதனால் என்றால், தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் எல்லாம் மக்கள் கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தா கண முடிபுகளுங் காணப்படுதலால் அவை வழங்குதற்கு எளிய அல்லாதனவாய் நாளடைவில் மாய்ந்து விட்டன; தமிழோ இயல்பாற் பிறக்கும் அமைந்த அன்னிய ஒலிகளுள் மிகவும் பொருத்தமான இலக்கண முடிபுகளும் இயைந்து பேசுதற்கும் பயிலுதற்கும் எளிதாய் இருந்ததனால் அங்ஙனம் அஃதிறவாமல் இன்னும் இளமை ஆராய்ந்து நடைபெறுகின்றதென்று உணர்ந்து கொள்க. க்ருதம், த்ருஷ்டி, த்வரிதம், ச்ருஷ்டி, ஹ்ருதய முதலான ஆரியச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள்! அவை பேசுதற்கு எவ்வளவு வருத்தமாய் இயற்கைக்கு மாறுபட்டனவாய் இருக்கின்றன! இச்சொற்களையே தமிழ்வடிவாகத் திரித்துக் கிருதம் திட்டி துரிதம் சிருட்டி இதயம் என்று சொல்லிப் பாருங்கள்! இனி, இவற்றிற்கு நிகரான இழுது, பார்வை, விரைவு, படைப்பு, நெஞ்சம் முதலான தூய தமிழ்ச் சொற்களைச் சொல்லிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/104&oldid=1584310" இலிருந்து மீள்விக்கப்பட்டது