பக்கம்:மறைமலையம் 17.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

87

முயற்சியும் உண்மையான பற்றும் இல்லாதவர்கள் பிறமொழி பேசுவோருடன் கலந்தால் தமது மொழிச் சொற்களை விட்டுப் பிறசொற்களையே எளிதில் எடுத்தாளத் தலைப்படுவார்கள். தமக்குரிய மொழியை வளம்பெறச் செய்யும் முயற்சியும் அதன்பாற் பற்றும் இல்லாமற் போதல் எதனால் என்றாற், பிறிதொரு மொழியிலுந் தாம் வல்லுநர் என்பதைக் காட்டித் தம்மை உயிர்வுபடுத்திக் கொள்ளும் எண்ணமும், பொருள் வருவாய் ஒன்றிலேயே நோக்கம் வைத்து அதற்கேற்றது பிறமொழிப் பயிற்சியே என்ற பிழைபட்ட கருத்துங் கொள்ளப் பெற்றிருத்தலாலேயாம். இதற்கு இத்தென்றமிழ் நாட்டிலுள்ள பார்ப்பன மாந்தரும், அவரைப் பின்பற்றினவரும் விடாப்பிடியாய்க் கைக் கொண்டிருக்கும் ஒழுகலாறே ஒரு பெருஞ் சான்றாகும். இத்தமிழ்நாட்டின்கண் உள்ள பொருள்களை வழங்குவதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருப்பவும், அவற்றை விடுத்து இத் தென்னாட்டிற்கு உரியவல்லாத வடமொழிச் சொற்களாலும், இப்போது சில ஆண்டுகளாக ஆங்கிலச் சொற்களாலும் அவற்றை அவர் வழங்கி வருகின்றனர். தமிழ் மக்கள் எல்லாருந் தண்ணீர் என்று வழங்கிவர, அவர்கள் அதனை ஜலம் என்று கூறுகின்றார்கள். எனக்கு ஓர் ஓர் ஏனத்திலே குளிர்ந்த நீர் கொண்டுவா, வறட்சியாயிருக்கின்றது” என்று சொல்ல வேண்டுவதை, ‘நேக்கு ஒரு பாத்திரத்திலே குளுந்த ஜலங்கொண்டா, தாகமா இருக்கு என்று வடசொற்களைச் சேர்த்தலோடு இடை யிடையே யுள்ளே தமிழ்ச் சொற்களையுஞ் சிதைத்துப் பேசுகின்றார்கள். இன்னும் ‘பயனற்ற செயல்' என்பதைப் 'பிரயோஜனமற்ற காரியம்' என்றும், வெயில், வெளிச்சம், வானம், காற்று, நெருப்பு, உணவு, உழவு, அலுவல், தூய்மை, நாடோறும், கல்வி என்பவற்றை முறையே சூர்ய ப்ரகாசம், ஆகாசம், வாயு, அக்நி, ஆகாரம், விவசாயம், உத்யோகம், பரிசுத்தம், திநே திநே, வவித்தை என்றும் வடசொற்களை அவர்கள் வழங்கி வருதல் எவரும் அறிவர். இவ்வாறு இன்னும் நூற்றுக்கணக்கான வட சொற்களை அவர்கள் தமிழ்ப் பேசுங்கால் இடையிடையே வேண்டா கூறலாய் வழங்கி வருகின்றனர்.

இங்ஙனஞ் செய்தல் இறந்துபோன வடசொற்களை முற்றுமே அங்ஙனம் விடாமற், சில பல சொற்களை யேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/112&oldid=1584318" இலிருந்து மீள்விக்கப்பட்டது