பக்கம்:மறைமலையம் 17.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

கட

மறைமலையம் -17

வளர்ந்து வருகின்றனர்; மக்கள் அல்லாத மற்றை உயிர்களில் நிலையியற் பொருள்களாகிய புல் மரஞ் செடி கொடி முதலியனவும், இயங்கியற் பொருள்களிற் புழு முதல் யாடுமாடு முதலான எல்லாவுயிர்களுந் தத்தமக்கேற்ற உணவுப் பொருள் களை உட்கொண்டு தத்தமக்கு இசைவான இடங்களில் இருந்து நாடோறும் மாறுதல் எய்தி வளர்ந்து வருகின்றன. இம் மூவகைப்பட்ட மாறுதல்களில் எத்தகைய மாறுதலை எல்லா உயிர்களும் விரும்புகின்றன வென்று உற்று நோக்கின், தம் இயல்புக்கு ஒத்தவற்றின் செயற்கையால் தமது தன்மை ாமல் வரவரப் பெருக்கமுற்று மாறிமாறி வளர்ந்து வருதலையே அவையெல்லாம் அல்லும் பகலும் விழைந்து வருகின்றவென்பது எல்லார்க்கும் புலனாம். தமக்கு ஏலாத பொருள்களொடு கலந்து தமது நிலைகுலைந்து மாறி மாய்தலை எவ்வகைப்பட்ட உயிரும் விரும்புவதில்லை; தமக்கு இடர்தரும் இடத்தையேனும் பொருளையேனுங் கண்டால் அவற்றை அகன்று போய்ப் பிழைக்கும் முயற்சியைப் புழு முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் மிகவும் பரபரப்பொடு நிரம்பக் கருத்தாய்ச் செய்தல் எவரும் உணர்ந்ததேயாம், விட்டுப் பெயராத புல் மரம் முதலியனவுங்கூடத் தத்தமக்கேற்ற இடங்களிற் செழுமையாய் முளைத்தெழுந்து தத்தமக்கேற்ற உணவுகளை உட்கொள்ளும் வரையில் உயிரோடிருத்தலும், அங்ஙனம் அமையாக்கால் அவை பட்டுப் போதலும் எல்லாரும் அறிவர்.

L

டம்

ஆகவே, உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் மாறுதல் அடைதலாகிய பொது நிகழ்ச்சியைப் பார்த்து, அப் பொதுவகையான மாறுதலுள் எத்தகைய மாறுதல் மக்களால் வேண்டப்படுவது என்பதனை உணர்ந்து பாராமல், தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டு, அதன்படி நமது அருமைச் செந்தமிழ் மொழியுந் தனது தூய நிலைகுலைந்து மாறுதல் அடைய வேண்டுமென்று உரைப்பது அறிவுடைய ரால் ஏற்றுக் கோடற்பாலதாமோ? எல்லாப் பொருளும் எல்லா உலகமும் ஒரு காலத்து மாறி மாய்தல் உண்மையேயாயினும், அம் மாறுதலும் அதனால் வரும் அழிவும் இப்போதே வந்துவிடல் வேண்டுமென்று எவரேனும் விரும்புவரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/121&oldid=1584330" இலிருந்து மீள்விக்கப்பட்டது