பக்கம்:மறைமலையம் 17.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

15. தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்

1936

நம் தமிழ்நாட்டவர் பொருளையுந், தமிழ்நாட்டை அடுத்துள்ள மற்றை இந்திய நாட்டவர் பொருளையும் மேல் நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றார் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடை செய்து அந்நாட்டவரின் பொருள் ங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டுவரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பாலதென்னும் ஆரவாரமும் நாடு எங்கும் பரவிப், பலவகைக் குழப்பங்களையும் பலவகைத் துன்பங்களையும் உயிரழிவுப் பொருளழிவுகளையும் ஆங்காங்கு விளைத்து வருகின்றன. பேர் அல்லலுக்கு இடமான இப்பிழை UTL ான வழியிற் புகுந்து நம்மனோர் துன்புறாமல், அவர்களைப் பாதுகாத்தல் வேண்டியே, எமது அறிவுரையை இங்கெழுது கின்றோம். இதனை நன்றாக, ஆராய்ந்து பார்த்து எமதுரை பொருந்துமாயின் அதனைக் கைப்பற்றியொழுகி நம்மவர் நலப்படுவாராக!

முதலில் நம் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குறை எ னென்றால், எதனையும் ஆய்ந்து ஓய்ந்து பார்க்குங் குணம் இல்லாமையேயாம். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சியுடைய பெரியராயிருந்தாலும், அவரைப் பத்துப்பேர் கொண்டாடா விட்டால் அவரை நம்மனோர் தாமுங் கொண்டாடமாட்டார்; அதுவேயுமன்றி, அவரைப் பத்துப்பேர் பொறாமையினாலோ, அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக் கேட்டால், அது தகுமா தகாதா என்று ஆய்ந்து பாராமல் தாமும் அவரை

னே இழித்துப் பேசிவிடுவார்; அவர்க்குத் தீங்கும் இழைப்பார். இனி, மற்றொருவர் கல்வியறிவு ஆராய்ச்சிகள் சிறிதும் இல்லாராயினும், அல்லது அவை சிறிதே யுடையாரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/154&oldid=1584375" இலிருந்து மீள்விக்கப்பட்டது