பக்கம்:மறைமலையம் 17.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் 17

என்று அருளிச் செய்தார்.

ஆயினுஞ், சிற்சிலர் தமக்குள் உடம்பின்றொடர்பு இல்லாதவராய் இருந்தாலும், உயிரும் உடம்பும்போல் அத்தனை நேயமும் அன்பும் உடையவராய் எவ்வகை இடுக்கண் வந்த காலத்தும் பிரிவின்றியிருக்கக் காண்கின்றோமேயெனின், அத்தகையோர், சிலநாளில் அழிந்துபோம் இப்பொல்லாப் புலால் உடம்பின் தொடர்பை நோக்காது, ஒருவரிடந்தமைந்த உயர்ந்த அறிவையும் உயர்ந்த அன்பையும் உயர்ந்த செயலையுமே நோக்கி நெகிழாத அன்பு பூண்டு, அவர் பொருட்டுத் தமது ஆவியையுந் கொடுப்பாராதலின் அஃது இங்கே காட்டற் பாலதன்று. ஒரு மகனுக்கு இயற்கையில் உண்டாகும் நேயமானது தொடர்பால் வருதலின் அதுவே

உடம்பின்

ஆராயற்பாலதாகும்.

ங்கு

இனி, உடம்பின் தொடர்புடையாரிலுந் தன்னைப் பெற்ற தாயுந் தந்தையுந் தன்னிலும் ஆண்டின் முதிர்ந்தாராய்த், தன்னைக் குழவிப் பருவந் தொட்டுப் பாதுகாத்து வளர்க்கப் பெருந்துன்பத்தை அடைந்தவர்களாயிருத்தலால் அவர் களுக்குத் தான் உதவியுந் துணையுமாய் நிற்க வேண்டுமே யல்லாது, அவர்களுடைய உதவியையுந் துணையையுந் தான் நாடலாகாது.

உடம்பைப்

தன்னைச் சேர்ந்த மனைவியோ பெண்பாலாய்த் தன் ம்பைப் பாதுகாத்துத் தனது இன்பத்திற்குக் காரணமாய் ருத்தலால், அவள்பாற் பேருதவியையும் பெருந்துணையையும் பெற விரும்புதல் ஆண்டன்மைக்கு அழகிதன்று.

தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளோ சிறுமழலைகளாய்ப் பருவம் முதிரும் மட்டுந் தன்னாற் பாதுகாக்கப்பட வேண்டிய வர்களாய் இருத்தலால் தனது முதுமைக்காலம் வரையில் அவர்களுடைய உதவியையுந் துணையையும் ஒருவன் எதிர் பார்க்கலாகாது. இனித் தன் உடன்பிறந்தாருள்ளுந் தன் அக்கையுந் தங்கையும் பெண்பாலராகலின், அவர்க்குத் தான் உதவியுந் துணையுமாய் நிற்றலே முறையாம்.

இவரெல்லாம் இங்ஙனமாகத் தனக்கு உயிர் வாழ்நாள் முழுதும் உண்மையுமான உதவியுந் துணையுமாய் நிற்றற் குரியவர் எவரெனின், தன்னொடு சிறிதேறக்குறைய ஒத்த ஆண்டும் ஒத்த அறிவும் ஒத்த தோழமையும் ஒத்த அன்பும் வாய்ந்த உடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/181&oldid=1584414" இலிருந்து மீள்விக்கப்பட்டது