பக்கம்:மறைமலையம் 17.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் -17

விட்டபடியல்லாமல் யாருந்தாம் விரும்புகிறபடி யெல்லாந் துய்த்தல் இயலாது. இதனாலன்றோ,

66

.

"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது'

என்று திருவள்ளுவ நாயனாரும்,

“எண்ணி யொருகருமம் யார்க்குஞ் செய்யொண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணிலான் மாங்காய் விழஎறிந்த மாத்திரைக் கோல்ஒக்குமே ஆங்காலம் ஆகு மவர்க்கு

என்று ஔவையாரும் அருளிச் செய்தனர். ஆதலால், தமது கையிற் கிடைத்தது காணிப்பொன் ஆனாலும், அதனைக் கோடியாக நினைந்து மனவமைதி பெறுதலே பெண்மக்கள் தம்மைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்குச் சிறந்த வழியாகும்.

இனி, நுகர்ச்சிக்குரிய பொருள்களை ஏராளமாக வைத்திருக்கும் மாதர்கள், தம்மை அவ்வளவு செல்வ வாழ்க்கையிற் பிறப்பித்த இறைவனது பேரருட்டிறத்தை நினைந்து நினைந்து உருகுவதோடு, அச்செல்வத் திரள்களை மிகவும் பாடுபட்டுத் தேடித் தொகுத்து வைத்த தம் முன்னோரையுந் தங்கணவரையும் நினைந்து நினைந்து அவரிடம் நன்றியுடையராய் அடங்கி யொழுகுதல் வேண்டும். தமது இல்லத்திற்கு வரும் விருந்தினர் எத்திறத்தவராய் இருப்பினும், அவரைத் தாம் எவ்வளவு அன்புடன் ஓம்புதல் கூடுமோ அவ்வளவுக்கு அகம் மலர்ந்து முகம் மலர்ந்து வேளை தவறாமல் இனிய உணவு ஊட்டி இனியராய் நடத்தல் வேண்டும். தாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தாய்ச் சென்றால் அவ்வீட்டவர் தம்மை அன்புடன் ஓம்புவதால் தமக்குண்டாம் மகிழ்ச்சியையும், அவர் அங்ஙனம் ஓம்பாவிட்டால் தமக்குண்டாம் மனவருத்தத்தையும் எண்ணிப் பார்க்கும் மங்கைமார்க்கன்றோ விருந்தினரை ஓம்புதலின் சிறப்பு நன்கு விளங்கும்? அன்பில்லாமற் செய்யும் விருந்தோம்பல்கள் வந்தவர்க்கு எவ்வளவு துன்பத்தைத் தரும்! இதற்கு.

6

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/195&oldid=1584436" இலிருந்து மீள்விக்கப்பட்டது