பக்கம்:மறைமலையம் 17.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும்

சாமி வேதாசலமென்னும் மறைமலை அடிகளின் கட்டுரை

66

தமிழறிஞர் சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதிய "அறிவுரைக் கொத்து என்னும் தமிழ் நூலைப் பற்றித் தற்போது பத்திரிகைகளில் பெரும் வாதப்பிரதி வாதம் நடந்து வருகிறது. அந்நூலில், “தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் என்ற கட்டுரையைப்பற்றியே சில பார்ப்பனர்கள் அவதூறாக எழுதிக்கொண்டு வருகின்றனர் அவர்களுடைய பொய்ப் பிரசாரத்தினால் தமிழ் மக்கள் ஏமாறாமலிருக்கவேண்டி, அக் கட்டுரையையும் அது சம்பந்தமாக வந்த மறுப்புகளுக்கு மறுப்பாக வந்த சில கட்டுரைகளையும் பிரசுரித்திருக்கிறோம். அதில் பொது நோக்கோடு எல்லா மக்களின் குறைகளையும், குற்றங்களையும் விளக்கப்பட்டிருக்கிறதை பொதுமக்கள் உணரவேண்டுமென்பதே நமது ஆவல்.

(ஆ-ன்)

தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும்

நம் தமிழ் நாட்டவர் பொருளையும், தமிழ் நாட்டை யடுத்துள்ள மற்றை இந்திய நாட்டவர் பொருளையும் மேல் நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றனர் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடைசெய்து இந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டுவரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பால தென்னும் ஆரவாரமும் நாடு எங்கும் பரவிப், பலவகை குழப்பங்களையும் பலவகை துன்பங்களையும் உயிரழிவு பொருளழிவுகளையும் ஆங்காங்கு விளைத்து வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/245&oldid=1584499" இலிருந்து மீள்விக்கப்பட்டது