பக்கம்:மறைமலையம் 17.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

221

பேர் அல்லலுக்கு இடமான இப்பிழை பாடான வழியிற் புகுந்து நம்மனோர் துன்புறாமல், அவர்களைப் பாதுகாத்தல் வேண்டியே, எமது அறிவுரையை இங்கெழுதுகின்றோம் இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து, எமதுரை பொருந்து மாயின் அதனைக் கைப்பற்றி யொழுகி நம்மவர் நலப்படுவாராக.

காண்ட

ாட

முதலில் நம் நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குறை என்னென்றால், எதனையும் ஆராய்ந்து, ஓய்ந்து பார்க்குங் குணம் இல்லாமையேயாம். ஒருவர் கல்வியறிவு ஆராய்ச்சி யுடை பெரியராயிருந்தாலும் அவரைப் பத்துப்பேர் விட்டால் அவரை நம்மனோர் தாமும் கொண்டாடமாட்டார்;அதுவேயுமன்றி, அவரைப் பத்துப்பேர் பொறாமையினாலோ, அல்லது வேறு காரணத்தாலோ இழித்துப் பேசக் கேட்டால்; அது தகுமா? தகாதா என்று ஆராய்ந்து பாராமல் தாமும் அவரை உடனே இழித்துப் பேசிவிடுவர்; அவர்க்குத் தீங்கும் இழைப்பர். இனி, மற்றொருவர் கல்வியறிவு ஆராய்ச்சிகள் சிறிதும் இல்லாராயினும் அல்லது அவை சிறிதேயுடையராயினும், பத்துப்பேர் அவர்பால் வைத்த பற்றினாலோ, அல்லது அவர்பால் தாம்பெறும் ஏதேனும் ஒரு பயன் குறித்தோ அவரைக் கொண்டாடுவராயின், அவர் எதற்காக அவரைக் கொண்டாடுகின்றார், நாமும் அவரை ஏன் கொண்டாடவேண்டுமென் மன்று சிறிதேனும் ஆராய்ந்து

.

பாராமல் உடனே அவரைக் கண்கால் தெரியாமற் கொண்டாடி விடுவர்; அக்கொண்டாட்டத்தால் வருந் துன்பங்களையுந்தாம் டைவர். பெரும்பாலும், நம் நாட்டவர் உண்மையறிவு ஆராய்ச்சிகளுடைய பெரியாரைக் கொண்டாடுவதும் ல்லை; அவரால் தாம் அடைதற்குரிய பெரும் பயன் அடைவதுமில்லை. வெளி மினுக்கும், வெற்றாரவாரமும் உடையாரைப் பின் பற்றித் தமது நலனையுந் தம் நாட்டவர் நலனையும் இழந்துவிடுவதே அவர்க்கு இயற்கையாய்ப் படிந்து விட்டது.

என்

இனி மேல்நாட்டவர்பால் உள்ள ஒரு பெருங்குணம் னன்றால், எவர் எதைச் சொன்னாலும், எவர் எதை எழுதினாலும் அவ்வப்பொருளின் இயல்புகளைத் தம்மாலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/246&oldid=1584500" இலிருந்து மீள்விக்கப்பட்டது