பக்கம்:மறைமலையம் 17.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

❖ LDMMLDMOшLD -17 →

ஆனால், மேல்நாட்டவர்களிலோ இவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்ப்பவரும் ஆராய்ந்து எழுதுவாரும், ஆராயுங் கழகங்களும், அவர்களாலும் எழுதி வெளியிடப்பட்ட வெளி யிடப்படுகின்ற நூல்களும், நாள் வெளியீடுகள், அவை தம்மைக் கற்பாருங் கற்பிப்பாரும், இவ்வகைகட்கெல்லாங் கோடிகோடி யாகத் தமது பொருளை வழங்குவாரும் எண்ணிக்கையிலும் அடங்குதல் இல்லை. மேல்நாட்டவர்கள் பசியெடுத்த வேளை யில் எந்த இடத்தில் எந்த உணவு கிடைக்கின்றதோ அதனைப் பெற்று மகிழ்ச்சியோடு உண்பர்; தமது வாழ்க்கைத் துணைக்கு எந்த நாட்டில் எவர் இசைந்தவராய்த் தெரியப்படுகின்றனரோ, அவரை மணந்து கொள்வர், உடம்பைப்பற்றிய இவ்விரண்டு குறைகளையும் இங்ஙனம் எளிதிலே நிரப்பிக்கொண்டு, அதற்கு மேல் அவற்றில் தம் கருத்தைச் செலுத்தாமல், தம் அறிவு ஆராய்ச்சிகளை மென்மேற் பெருக்குவதிலும், நாடோறும் புதிய புதிய ஆற்றல்களையும், புதிய புதிய பொறிகளையும், புதிய புதிய உண்மைகளையுங் கண்டுபிடிப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலுமே தமது கருத்தை ஓயாமற் செலுத்தி

வருகின்றனர்.

6

மற்றும், நம் நாட்டவரோ மேலே காட்டியபடி, நிலை யில்லாமல் அழிந்துபோகுந் தமது உடம்பைப் பற்றியும், அவ்வுடம்பால் வந்த தொடர்புகளைப் பற்றியுமே எந்நேரமும் பேசியும், நினைந்தும் வருவதல்லாமல், என்றும் நிலையாக இருக்கத்தக்க தமது அறிவு விளக்கத்தைப்பற்றி யதால், தம் அன்பையும், அருளையும் வளர்க்குங் கடமைகளைப் பற்றி யதால் பேசியும், எண்ணியும் வரக்காண்கின்றோம் இல்லையே!

6

இன்னும், நமது வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப் படுவன கல்விப் பொருளுஞ் செல்வப் பொருளும் என்னும் ரண்டுமேயாகும் கல்விப் பொருளைப் பெற்றவர்கள், தமக்கும் பிறர்க்கும் நன்மையைத் தருந் துறைகளை ஆய்ந்து பார்த்துக் காலத்தின் நிலைக்கும் ஒத்த முயற்சிகளைச் சோம்பாது செய்வார்களாயின், அவர்கட்குச் செல்வப்பொருள் தானேவரும். வெறுஞ் செல்வம் மட்டுந் தனது பழவினைப் பயத்தால் வாய்க்கப் பெற்றவர்கள் அங்ஙனங் கல்விப் பொருளை எளிதிலே பெற்றுக் கொள்ளுதல் இயலாது. மேலுங், கல்விப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/249&oldid=1584504" இலிருந்து மீள்விக்கப்பட்டது