பக்கம்:மறைமலையம் 17.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

253

னே பல

தெரிசன உரிமை எல்லாருக்கும் வேண்டுமென்ற உ பார்ப்பனர்களும் பண்டிதர்களும் கூடி "வேதத்தைச்சொல்ல இவனுக்கு அதிகாரம் யார் கொடுத்தார்கள் சமஸ்கிரதம் தெரியாத முட்டாள்” என்றார்கள். அது ஏன்?

இவர்களெல்லாம் சமயத்தில், படிப்பில், பக்தியில் உயர்ந்தவர்கள்தானே? ஆகவே, சுருங்கச் சொல்லுவதானால் சூத்திரன் என்று சொல்லப்பட்டவர்கள் கல்வி அறிவை அடையக்கூடாது என்பதும், அப்படி அடைவதற்கு அவர்கள் சாஸ்திரமும் மன எண்ணமும் கொடுக்கவில்லை.

பழக்கமும்

இடம்

எண்ணங்களையும்,

கால சக்தியானது அவர்கள் சாஸ்திரங்களையும் தள்ளிக்கொண்டே போகிறது என்பதை அவர்களில் பலர் அறிந்திருந்தாலும், மற்றவர்களின் அறியாமை யும் ஆலோசனையில்லாமையும் கண்டு, அந்த எண்ணத்தையும் முயற்சியையும் அவர்கள் விடுவதில்லை. பரம்பரமாய் ஏமாற்றிவந்த பழக்கத்தினால்தான் இவ்விதமான காரியத்தில் வகு சுளுவாய்ப் பிரவேசிக்கிறார்கள், வெற்றியுமடை கிறார்கள். அதனால்தான் சூத்திரன் என்பதற்கு மடையன் என்கிற அர்த்தமும் சொன்னார்கள். அதனாலேயே குடிஅரசுப் பத்திரிகை சூத்திரன் என்பதின் அர்த்தத்தை யெல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இவ்வளவு கஷ்டப்

படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/278&oldid=1584533" இலிருந்து மீள்விக்கப்பட்டது