பக்கம்:மறைமலையம் 17.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

ஐஸ்டிஸ் அபிப்பிராயம்

99

“பாட புத்தகத் தகராறு” என்ற தலைப்புடன் “ஐஸ்டிஸ்” பத்திரிகை பின்வரும் தலையங்கம் எழுதியுள்ளது:- தமிழ் இலக்கியம், கலை இவைகளின் ஆராய்ச்சியில் இம்மாகாணத் திலே தமக்கிணை எவருமில்லையென விளங்கும் மாபெரும் புலவரான சுவாமி வேதாசலம் எழுதிய “அறிவுரைக்கொத்து என்ற புஸ்தகத்தைச் சென்னை சர்வகலாசாலை இன்டர்மீடியட் பரீட்சைக்குப் பாடப் புஸ்தகமாக ஏற்பாடு செய்திருக்க அப்புஸ்தகத்தில் கண்டுள்ள அபிப்பிராயங்கள் ஒழுங் கானவையா? அல்லவாயென்பது பற்றி நாம் சில கடிதங்களைப் பிரசுரித்திருக்கிறோம். அந்த புஸ்தகத்தில் காணும் பல விஷயங் களைப்பற்றி தாரதம்மியங்கள் நமது சக வர்த்தமானிகள் சிலவற்றில் பிரசுரமாகியுள்ளன. திருவல்லிக்கேணியிலும், இதர இடங்களிலும், நடந்த எதிர்ப்புக் கூட்டங்களில் அந்தப் புஸ்தகத்தை தடைசெய்ய வேண்டுமென்று தீர்மானங்கள் நிறை வேறின. அக்கூட்டங்களின் நடவடிக்கைகளையும் நாம் வாசித்தோம். இவ்விதக் கிளர்ச்சிகளெல்லாம் ஒருபுறமிருக்க, அந்தப் பாடப் புஸ்தகத்தைப்பற்றி நமது சக வர்த்தமானியான 'ஹிந்து' தலையங்கம் எழுதியுள்ளது. அப்பத்திரிகை “அறிவுரைக்கொத்து” மீது கூறும் ஆட்சேபணைகள் நியாயம் என்பதை நிரூபிக்க முயன்றிருப்பதோடு, அப் புஸ்தகத்தை பாடப் புஸ்தகமாக வைக்கக்கூடாதென்பதை வற்புறுத்துகிறது. அந்தப் புஸ்தகத்தில் கண்டுள்ள சில விஷயங்களைப்பற்றி ஒரு பிரிவினர் கோபமடைந்தது கண்டு நாம் அந்தப் புஸ்தகத்தை வாசித்தோம். இம்மாகாணத்தில் கடந்த இருபது வருஷ காலமாக நிலவிவரும் அபிப்பிராயமே தங்களை ஞாபகத்தில் வைக்கும்பட்சத்தில் அந்தப் புஸ்தகத்தில் கண்டுள்ள விஷயங்கள் அசாதாரணமானவையல்ல வென்பதும், மனக் கசப்பை உண்டு பண்ணத்தக்கவை யல்லவென்பதும் வெளிப் படையாகும்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/296&oldid=1584551" இலிருந்து மீள்விக்கப்பட்டது