பக்கம்:மறைமலையம் 17.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மறுப்புக்கு மறுப்பு

283

என்னும் ஆதிதிராவிட சூப்ரவைசரை வெளியில் வைத்து அன்னமிட்ட தியாகிகள்! அவர் அதைக் கண்டித்துப் பத்திரிகைகளில் எழுதியதனால் வேலையிலிருந்தும் அவரை நீக்கிவிட்டார்கள்!

ஆத்திரத்தின் காரணம்

புகழ்ச்சி

அவர்கள்

நாடக சினிமா நடிகர்கள் பிராமணராயிருந்தால், உடனே ஊரெங்கும் நடிப்பும் பாட்டும் ஆ பாசமாயிருந்தாலும் பரவாயில்லை பிராமணரல்லாத நடிகர் என்ன சிறப்பாக நடித்தாலும் நூற்றல்தான்.

.

இந்நிலைமையே இன்று சுவாமி வேதாசலத்திற்கும் ஏற்பட்டுள்ளது. அவருடைய புத்தகங்களை ஒரே வருடத்தில் இரண்டு யூனிவர்சிட்டியார் வைத்துவிட்டார்கள். இந்த வயிற்றெரிச்சல் ஒன்று; இவர் தமிழில் இணையற்ற பெரும் புலவர்; ஈடும் எடுப்புமில்லாதவர். இவருக்கு முன்நின்று எதிர்வாதமிடும் தமிழ் புலவர் எவரும் இந்நாட்டில் இல்லை என்பது இரண்டு. ஆகவே இத்தகைய பேரறிவாளரை நசுக்கவேண்டுமென்பது பிராமணர் கூட்டத்தாரின் பல நாளைய முயற்சி. தோழர் சுவாமி வேதாசலம் எழுதிய புத்தகத்தில் எங்கோ ஒன்றிரண்டிடங்களில் 'பார்ப்பனர் ஒழிந்த நம்மனொர்' என்றிருப்பது இவர்கள் மானத்தைப் போக்கிவிட்டதாம்; இவர்கள் காரியத்தில் சாதித்துவரும் ஜாதித் துவேஷத்தைவிட, இவ்வார்த்தைகள் எவ்விதத்தில் மேற்பட்டன?

விளங்கவில்லை.

மறுப்பின் போக்கு

66

66

கடுதலானவை?

என்பது

தான்

அறிவுரைக்கொத்”தை மறுத்து எழுதியிருப்பவர், “சுவாமியார், இராமாயணம்- பாரதம் என்னும் மகத்தான புண்ணிய கதைகளை பொய், தவறு என்று கூறி, ஹிந்துக்கள் மனத்தைப் புண்படுத்தியிருக்கிறார்” என்றும் ஒருவர் “ஹிந்து” வில் எழுதியுள்ளார். இராமாயணமும், பாரதமும் யாருடைய கதைகள்? தமிழருடையனவா? ஹிந்துக்கள் யார்? மறுப்புரை எழுதியவர் ‘ஹிந்து' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூறுவாரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/308&oldid=1584564" இலிருந்து மீள்விக்கப்பட்டது