பக்கம்:மறைமலையம் 17.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

293

ஆங்கிலம் படித்தவர் தம்மை அறிவாளிகள் எனவும், ஆளும் மாட்சியினர் எனவும் நம்பிக் கோடிக்கணக்கான தாய்மொழியாளர்களை இகழ்ந்து ஒதுக்குகின்றனர். இதனால் மனிதப்பண்பே - உரிமையே - அன்பே - தாழ்ந்து மதிப்பற்றதாகி விடுகின்றது.

அறமன்றங்களும் (கோர்ட்டுகள்), ஆட்சிமன்றங்களும், கல்லூரிகளும் ஆற்றும் சிறிய செயல்களைக் கூடக் கோடிக் கணக்கான பொதுமக்கள் அறியவியலாது தவிக்கின்றனர். ஒரு சிலரான அரசாங்க ஊழியர்கட்காகக் கோடிக்கணக்கான மக்கள் அல்லற்பட வேண்டுமா? இதுவா மக்களாட்சி! என்ன கொடுமை!

இன்னும் சல்வி நிலையங்களில், கல்லூரிகளில் கற்பிக்கும் மொழியுடன் அவற்றின் அன்றாடச் செயல் மொழியும் ஆங்கிலமாயிருப்பதால் மாணவர்கள் பால் தாய்மொழியில் அருவருப்பும், ஆங்கிலத்தில் பெருமிதமும், பேராசையும், பதவியார்வமும், போலி நடையுடை பாவனைகளும் மிகுகின்றன. ஆங்கிலமே பயன்தருவது; தமிழ் வாழ்வுக் குதவாது; மதிப்புத் தராது யென்றெல்லாம் எண்ணித் தமிழ் மொழி, தமிழ் வகுப்பு, தமிழாசிரியர்களை மாணவர்களும் பிறரும் ஏளனம் செய்து வருவது யாவரும் அறிந்தனவே. இவற்றால் மாணவர் தன் மானத்தை இழந்து அடிமை நிலையடைகின்றனர்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும், பல்கலைக் கழக ஆணையர்களும், துணை வேந்தர்களும் ஆங்கிலப் புகழ்பாடிகளாக அம்மொழியிலேயே பேசி நடமாடி எச் செயலையும் செய்வதால் மாணவர் அனைவரும் அப்படியே செய்கின்றனர். இப்படித் தம் தாய்மொழியை இகழ்ந்து அயல் மொழிக்கு அடிமையாகிப் பேடியராக நாட்டார் எவரேனும் உளரோ? கூறுமின்!

நாட்டின் பல்வேறு துறைகளில் உயர்ந்தவராக உள்ளார். அனைவரும் ஆங்கிலப் பட்டமுடையவர்கள் - நாளிதழ், கிழமை இதழ் நடத்தும் ஆசிரியர் அனைவரும் பட்டதாரிகளே! தொழில் வல்லுநர் அனைவரும் அப்படியே. கல்லூரி ஆசிரியர்களோ சால்ல வேண்டியதில்லை. இவர்கள் யாவரும் (ஓரிருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/318&oldid=1584576" இலிருந்து மீள்விக்கப்பட்டது