பக்கம்:மறைமலையம் 17.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகளைப் போல அரியபுலவரை இனித் தமிழகம் பெற முடியுமா? நனவிலும், கனவிலும் தமிழையே நினைந்து அதைத் தன் உயிரினும் மேலாகப் போற்றி வளர்த்த பெறலரும் பெரியார். தம் வடமொழிப் புலமையினையும், ஆங்கிலப் புலமையினையும் தமிழ் ஆக்கத்திற்கே பயன்படுத்தி அதன் பெருமையை வெளி நாட்டவரும் உணரச் செய்தபெருமை அவருக்குண்டு. அவருடைய வீர உணர்ச்சி மறையவில்லை. அவருடைய சொற்பெருக்குகளும், நூல்களும் அவ் வுணர்ச்சியைத் தமிழகத்திற்கு ஊட்டிக் கொண்டிருக்கும்.

பி. ஆர். கிருட்டிணமூர்த்தி நாயுடு

அடிகளார் நுண்மாண் நுழைபுலச் செல்வராய் நாவீறு டையராய், எழுத்தாற்றலில் எவரும் வியக்கத்தக்க எழுத்தாளராய் இலங்கியும், அவ்வாற்றல்களை அடிமை வாழ்விலீடுபட்டு விழலுக்கு இறைத்த வீணீர் ஆக்காமல் உரிமை வீறுடன் தனிமையில் உழைத்துப் பொருளும் புகழும் ஈட்டி வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் மறைமலை யடிகள்.

- மே.வீ. வேணுகோபால பிள்ளை

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600017 :

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/330&oldid=1584590" இலிருந்து மீள்விக்கப்பட்டது