பக்கம்:மறைமலையம் 18.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

  • மறைமலையம் -18

கூடியவர்களானார்கள்.

அவனது மார்பு சிறந்த ஒரு பெண்மகளின் மார்புபோற் பெரிதாய் அழகிய தாய் இருந்தது. ஆனால் அவன் முதுகைத் திருப்பிய போது ஆண்மகனாகவே காணப்பட்டான். அதன் பின்னர் அவன் அக்கப்பலைச் சுற்றி நீந்தி மறைந்து போய்விட்டான். அதற்குப் பிறகு அக்கப்பலி லுள்ளவர்கள் அவனைப் பார்க்கவில்லை.

காலை பத்து மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரையில் அக்கடல்மகன் அம்மரக்கலத்துடனேயே வந்தனன். அம்மரக்கலத்திருந்தவர்கள் அவனைக் கண்டு அச்சமுறா திருந்தால், அவனைக் கப்பலின் மேல்தட்டுமேற் பலகாலும் ஏற்றியிருக்கலாம். அவனதுடம்பின் நீளம் ஏறக்குறைய எட்டடி; தோலின் நிறம் பழுப்பு; அத்தோலின் மேற்செதிள் ஏதும் ல்லை; அவனுடைய நடையெல்லாம் மக்கள் நடைகளையே ஒத்திருந்தன; கண்கள் இருக்கவேண்டிய அளவுப்படியே அமைந்திருந்தன; வாய் சிறு அளவினது; மூக்குப் பெரிதாயும் தட்டையாயும் இருந்தது; பற்கள் மிகவும் வெண்மையாய்த் தோன்றின; மயிர் கறுப்பு; மோவாயிற் பாசிபடர்ந்தாற்போல் மயிர்கள் இருந்தன; மூக்கின் கீழ் ஒருவகையான மீசை; காதுகள் மக்களின் காதுகளைப் போலவே காணப்பட்டன; ஆனால், அவனுடைய கைவிரல் கால்விரல்களுக்கு இடையில் மட்டும் தாராப் பறவைகளுக்குள்ளது போல் செலு இருந்தது. சுருங்கச் சொல்லுங்கால் அவன் திருத்தமான அமைப்பு வாய்ந்த ஓர் ஆண்மகனாகவே காணப்பட்டான். இங்ஙனங் காணப்பட்ட அக்கடல் மகனைப் பற்றிய செய்தி முற்றும் உண்மையென்று அக்கப்பல் தலைவனும் மீகாமனும் அதில் வேலைசெய்த முப்பத்திரண்டு ஆட்களும் உறுதிமொழி புகன்றார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/113&oldid=1584727" இலிருந்து மீள்விக்கப்பட்டது