பக்கம்:மறைமலையம் 18.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

81

26. உற்றுநோக்கி ஆராய்தல்

உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிறியவாய் இருப் பினும் பெரியவாய் இருப்பினும், அவைதம்மை உற்றுநோக்கி ருப்பினும்,அவைதம்மை ஆராய்ந்தவர்களே அறிவில் பெரியராகிப், பல அரும்பெரும் புதுமைகளைக் கண்டறிந்து, நம்மனோர்க்கெல்லாம் அளப்பிலா நன்மைகளைச் செய்திருக்கின்றார்கள். எதனையும் உற்றுநோக்கி ஆராய்தலின்றி, ஆடு மாடுகளைப் போல் பொதுநோக்காய்ச் சன்றவர்கள் தாமும் அறிவு விளங்கப் பெற்றதில்லை; பிறர்க்கும் நன்மையாவன செய்ததில்லை. சோற்றுக்குக் கேடும், மண்ணுக்குப் பொறையுமாய் இருந்து அவர்கள் தம் வாழ்நாளை உண்டு உடுத்து உறங்கிக் கழித்தவர்களேயாவர். இலந்தை மரத்திலிருந்து நன்றாய்ப் பழுத்த பழங்கள் உதிர்ந்து கீழ் விழுவதனை எத்தனைகோடி மக்கள் முற்காலத்தும், பிற்காலத்தும் பார்த்திருக்கின்றார்கள்! அவர்களுள் எத்தனை பேர் அவைகள் ஏன் அங்ஙனம் கீழ் விழுகின்றன என்று ஆராய்ந்து பார்த்தவர்கள்? நியூட்டன் என்னும் ஒருவரைத் தவிர ஏனைக் கோடியான மக்கள் எவரும் அதன் உண்மையை அறியவில்லையே! ஏன்? உற்றுநோக்கி ஆய்ந்துபார்க்கும் அறிவும் முயற்சியும் அவரைத் தவிர மற்றையோர்க்கு இல்லாது போனமையாலன்றோ? மற்று, நியூட்டன் என்னும் பேராசிரியரோ இவ்உலகியற் பொருண்மைகளை எந்நேரமும் உற்று நோக்கியபடியாகவும், உற்றுநோக்கி ஆராய்ந்தபடியாக வுமே தமது அரிய வாழ்நாளை எந்நேரமும் பயன்படுத்தி வந்தார். ஒருகால் அவர் ஓர் இலந்தை மரத்தினடியில் அமர்ந் திருக்கையில், அதில் நன்றாய்ப் பழுத்திருந்த ஒரு பழம் காம்பு கழன்று அவரது காலண்டையின் கீழ் விழுந்தது. அதனைக் கண்ட அவர், உடனே, அஃதேன் அங்ஙனம் கீழ் விழலாயிற்று என ஆராயப் புகுந்தார். அந்நிகழ்ச்சியினைப் புல்லியதென்று விலக்கிவிடாமல், அல்லும்பகலும் அவர் அதனைப் பலவாற்றான்

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/114&oldid=1584728" இலிருந்து மீள்விக்கப்பட்டது