பக்கம்:மறைமலையம் 18.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

கி.பி.1492-ம்

85

கொலம்பசு என்பவரோ தாமிருந்த ஸ்பெயின் தேயத்தை யடுத்த பெரும்புறக் கடலுக்கும் அப்பால் ஒரு பெருந்தேயம் உளதென்றறிந்து, மூவாயிரத்தைந்நூறு மைலுக்கு மேல் அதனைக் கடந்து சென்று, கி.பி. 1492-ம் ஆண்டில் அமெரிக்க தேயத்தைக் கண்டுபிடித்தார். அப்பெரும்புறக் கடலுக்கும் அப்பால் ஒரு பெருந்தேயம் உண்டென்பதைக் கண்ட அவரது ஆராய்ச்சி அறிவின் தெய்வத்தன்மையை என்னென்றுரைப் போம்! அதன் உண்மையை ஆராய்ந்து கண்ட அளவில் ராமல், தம் நாட்டு அரசற்கும் அரசிக்கும் அதனை மெய்ப் படுத்திக் காட்டி, மூன்று மரக்கலன்களும் நூற்றிருபஃது ஆட்களும் தாம் அக்கடல் கடந்து செல்லுதற்கு உதவியாகத் தம் அரசர்பாற் பெற்றுக்கொண்டு, முன் எவருமே சென் றறியாத அப்பேராழியில் வழிகண்டு டு சென்ற அவர்தம் அறிவாற்றலையும் அஞ்சா ஆண்மையினையும் எண்ணுந் தோறும் எம் நெஞ்சம் அளவிலடங்கா இறும்பூதும் திகைப்பும் அடைகின்றது!

L

இங்ஙனம் அப்பெரும்பௌவங் கடந்து சென்ற காலம்பசுப் பெரியாரின் பேரறிவின் திறம், அவர்தாம் மேற்கொண்டு சென்ற அவ்வருஞ்செயலை எவ்வாறு பயன் பெறச் செய்ததென்பதும் நினைவுகூரற்பாற்று. பிறர்க்கு வழிதிசை தெரியாப் பெருவெள்ளக் காடான அப்பேராழியி னூடே அவர் எவ்வாறு வழிதெரிந்து சென்றார் என்பதை நினைத்தால் எவர்க்குத்தான் வியப்பெழாது! எவர்க்குத்தான் நெஞ்சம் திகில் கொளாது! இவ்வளவு தெரிந்து சென்றதே ஒரு தெய்வத்தன்மை! இதனினும் சிறந்த ஒரு தெய்வ அறிவும் இவரை அந்நடுக்கடலில் காப்பாற்றியது. இவர் ஐந்து கிழமை களாக அல்லது முப்பத்தைந்து நாட்களாக அப்பெருநீரில் அம்மூன்று கப்பலையும் கொண்டு செல்கின்றார். வழிதுறை ஒன்றும் தெரியவில்லை! நாற்புறமும் சூழ ஒரே வெள்ளக்காடு! தேடிச் செல்லும் தேயம் சிறிதும் தென்படவில்லை! அம்மூன்று மரக்கலங்களிலும் அவருக்கு உதவியாய்ச் சென்ற ஆட்க ளெல்லாரும் இனி நிலத்தைக் காண்போமா என்று ஏங்கி நம்பிக்கை இழந்தார்கள். தம்மை அப்பெருநீருக்கு இரை யாக்கவே அவர் கொணர்ந்தாரென எண்ணி, எல்லாரும் அவரைத் துன்புறுத்தத் தொடங்கிவிட்டனர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/118&oldid=1584732" இலிருந்து மீள்விக்கப்பட்டது