பக்கம்:மறைமலையம் 18.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

125

ஒரு வரிசையாக இடப்பட்டிருந்த யானை மருப்பில் செய்த நாற்காலிகள் ஒவ்வொன்றிலும், நரைத்த தலை மயிரும் நரைத்த தாடிமயிரும் உடையவராய்த் திறப்பாக விடப்பட்ட கைகால் களுடன் ஊதாச் சரிகைக் கரைகோத்த விளிம்புகள் வாய்ந்த வெள்ளைக் குப்பாயம் பூண்டு, கையில் வெள்ளிய செங்கோல் பிடித்த உருவங்கள் ஆடாத அசையாத முகத்துடன் பெருந் தன்மையோடு அமர்ந்திருத்தலை ல கண்டார்கள்.

அக்காலவர்கள்

கண்ட அவ்வுருவங்களின் கண்களைத் தவிர மற்ற உறுப்புக்களினால் அவை உயிருள்ளவென்று நம்புதற்கு இடம் இல்லாமலேயிருந்தது. அதனால், அக்காலவர்கள் அவை உயிர் உள்ளவைகளா இல்லாதவைகளா எனத் தம்முள் ஐயுற்று, அவ்விழுமிய காட்சியைக் கண்டு திகைப்புற்று அவற்றின் முன்னே வாய்வாளாது நின்றனர். அவ்வுருவங்கள் தெய்வ வடிவங்களா அல்லது அவ் உரோம் நகரத்தில் அரசு செலுத்தும் தலைவர்களின் குழுவா என்று இறும்பூதுற்று எண்ணினர். கடைசியாக அவர்களில் முரடனான ஒருவன் அவ்வடிவங் களின் உண்மையைத் தெரிதல் வேண்டி, அவற்றுள் ஒன்றன் தாடி மயிரைப் போய்த் தடவினான். நாகரிகமற்ற ஒரு காலவன் அங்ஙனம் தம்மைத் தொடுதற்கும் பழித்தற்கும் உரோமரது உள்ளம் பொறுக்குமோ! உடனே, தொடப்பட்ட அவ்வுருவம் தன் கையில் பிடித்திருந்த வெள்ளைக் கோலால் தன்னைத் தொட்டவன் தலையைப் புடைக்கவே, காலவர் கொண்ட ஐயம் ஒழிந்தது. அங்கு அமர்ந்திருந்த அவ்வுருவங்கள் உரோம் நகரின் அரசியல் தலைவர்களே எனத் தெளிந்தனர். தெளிந்ததும், அத் தலைவரின் மாட்சி வடிவம் கண்டு அக்காலவர்கட்குண்டான வணக்க ஒடுக்கமெல்லாம் பறந்து போயின. உடனே அக் கொடியவர்கள் பெருஞ்சீற்றத்துடன் அவர்கள்மேல் பாய்ந்து, ஒவ்வொருவரையும் நாற்காலியிலிருந்தவாறே வைத்துக் கத்தியால் குத்திக் கொன்றார்கள்! அதன்பின் அவர்கள் அந்நகரமெங்கும் பரவி வீடுகளில் புகுந்து கொள்ளை யிட்டும், அவைகளைத் தீக்கொளுவியும் அழித்தனர்.

டை

யைக்

யக்

ஆனாலும், அவர்கள் கவித்தலை மலைக்கோட் கப்பற்றுவது தம்மாலியலா டார்கள். கண்டு அதனுள் இருந்தவர்களைப் பட்டினி கிடத்தி

தன்று

கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/158&oldid=1584772" இலிருந்து மீள்விக்கப்பட்டது