பக்கம்:மறைமலையம் 18.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

127

தோய்ந்து நின்ற நினைவுடையார்க்கு எவராலும் எதனாலும் நாம் விண்டு

எத்தகைய

டரும் நேராதென்பதனை

சொல்லுதலும் வேண்டுமோ அறிக!

இனிக், கவித்தலை மலைக்கோட்டையினுள்ளிருந்து பசித்து வருந்தும் உரோமர்கள் எவ்வாறாயினர்? அவர் கட்குக் கோட்டையின் வெளியேயிருந்து எவ்வாறு உதவி வந்தது? என்று கூறுவாம். அவ்வுரோம் நகரிற் போராண்மை யில் சிறந்த 'காமிலியன்' என்பான் ஒருவன் இருந்தனன். அவன் அத்தலைநகரைச் சூழ இருந்த பட்டினங்களில், உரோமர்க்குப் பகைவராயிருந்தார். அனைவரையும் வென்று அடக்கினவன் ஆவான் என்றாலும் தற்பெருமையும் செருக்கும் அவன்பால் மிக்கிருந்தமையால், அவனை எல்லாரும் வெறுத்து அவன்மேல் இல்லாத குற்றம் சுமத்தி, அவன்பாலிருந்த பெருந்தொகைப் பொருளையெல்லாம் பிடுங்கப் பார்த்தனர். அதனால் அவன், அயலிலுள்ள ‘ஆரதியம்' என்னும் ஊரில் போய்க் குடியேறி வாழ்ந்து வந்தனன்.

6

யை

ஈதிங்ஙனமிருக்கக் காலவர் தலைவனான பிரானது படையில் பாதி மேற்சொன்ன ஆரதிய ஊரைத் தாக்க வரும் செய்தி அதன்கண் உள்ளார்க்கு எட்டியது. அதுகேட்ட காமிலியன் உடனே அவ்வூர்த் துரைத்தனத்தாரிடம் சென்று, தான் அவ்வூரைக் காப்பதற்கு முன் நிற்பதை அறிவிக்க, அவர்களும் அதற்கு மகிழ்வுடன் இசைந்து, அவ்வூர்ப் படை அவன்பால் ஒப்புவிக்க, அவனும் படைக்கலம் பிடிக்கத்தக்க பொருநரையெல்லாம் ஒரு மிக்கத் திரட்டிக் கொண்டு போய், எதிரேறி வந்த காலவர்படையை நள்ளிரவில் தாக்கி அதனைச் சின்னபின்னமாகச் சிதற வடித்துச் சவட்டித், தனதூரைக் காத்தான். இவன் செய்த போராண்மைச் செயல், சிதைவுண்டு சிதறிய உரோமர்களின் செவிக்கு எட்ட அவர்கள் அதனால் மனக் கிளர்ச்சி மிகப் பெற்றுத் தமக்குக் காமிலியன் படைத்தலைவனாக நிற்க ஒருப்பட்டால், தாம் கவித்தலை ல மலைக்கோட்டையில் யில் உள்ள தம்மவர்க்கு உதவிசெய்து, திரும்பவும் உரோம் நகரின் பெரும்புகழை மீட்டு நிலைபெறுத்துதல் கூடுமென நினைந்து, காமிலியனுக்குத் தம்முடைய கருத்தையும் வேண்டுகோளையும் தெரிவித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/160&oldid=1584774" இலிருந்து மீள்விக்கப்பட்டது