பக்கம்:மறைமலையம் 18.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

149

நிறம் உடையனவும், சிவந்த நிறம் உடையனவும் என மூன்று திறமாயிருக்கின்றன.

சந்தனக்கட்டைகளை அரைத்து, களை அரைத்து, அரைத்தெடுத்த தேய்வையைத் தனியாகவும், பனிநீர் லவங்கம் எலம் கருப்பூரம் சாதிக்காய் தக்கோலம் முதலான மணப் பொருள்கள் கூட்டிய கலவையாகவும் எடுத்துக், கட்டி யாகவோ கரைத்த குழம்பாகவோ இறைவன் திருவுருவத் திற்குச் சாத்துகின்றார்கள், சந்தனத் தூளையுஞ் சந்தனச் சீவுகளையும், அகில் அகரு பச்சிலை சிச்சிலிக்கிழங்கு கிளி யூரற்பட்டை மட்டிப்பால் பாற்சாம்பிராணி முதலான மணப்பொருள்களுடன் கலந்து இடித்து, இடித்த தூளைத் திருக்கோயில்களில் இறைவனெதிரே நெருப்பிலிட்டுப் புகைக்கின்றார்கள். இப்புகையானது நறுமணம் பரப்பித் தொழவருவார்க்கு மகிழ்ச்சியளித்து, மனத்தை அமைதிப் படுத்தி, அவரது நினைவையும் ஒருமுகப்படுத்தி அதனை றைவன் திருவுருவத்திற் பதித்து, அவரது நெஞ்சம் அன்பிற்றதும்பி நிற்குமாறுஞ் செய்கின்றது. அதுவேயுமன்றி, மக்கள் நெருக்கடியாலும், அவரதுடம்பினின்று வெளி யாகும் வியர்வை நச்சுக்காற்றுக்களாலும், நோய் கொண் L டாரிடமிருந்து பன்னூறாயிரக் கணக்காய்ப் புறத்தே வரும் நச்சுப்புழுக்களாலுங் கோயில்களின்உள்ளுள்ள காற்று நஞ்சாகுதலால் அங்கே புகைக்கப்படுஞ் சந்தனம் முதலான நறுமணப்பண்டங்களின் புகை, அந்நச்சுப்பூச்சிகளையும் நச்சுக்காற்றையும் அப்புறப்படுத்திக், கோயிலையுங் கோயி லினுள் வணங்க வருவாரையுந் தூய்மைசெய்து, சய்து, அவ் விடத்தை நறுமணங் கமழச் செய்கின்றது.

திருக்கோயில்களின் மட்டுமேயன்றிச், சிறப்புநாட் கொண்டாடுங் கழகங்களிலுந், திருமணம் நடத்தும் இல்லங் களிலும், மக்கள் நறுவிய மலர்களும் மலர்மாலைகளும் நிறைத்தலுடன், சந்தனமும் பனிநீருந் தெளித்து அவ்விடங் களை நன்மணங்கமழச் செய்தலால், அங்குக் குழுமுவார்க்கு மனக்களிப்புண்டாதலே யல்லாமல், மனநலம் உடல்நலங் களும் உண்டாகா நிற்கின்றன. மன்றலுக்கு (கல்யாணத் திற்கு)த் தமிழில், 'திருமணம்' என்னும் பெயர் அமைந்தது, அஃது அயருங்காலத்து எங்குமுள்ள மணப்பண்டங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/181&oldid=1584815" இலிருந்து மீள்விக்கப்பட்டது