பக்கம்:மறைமலையம் 18.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

153

3. காலதியன் கிரிசெலாள் கதை

சய்து

மேற்கே இத்தாலியா தேயத்திற் புகழோங்கிய குறுநில மன்னர்களில் மிகச் சிறந்தவனாகிய 'காலதியன்' என்பான் ஒருவன் இருந்தனன். அவன் இளைய அகவையினனேனும், மனைவிமக்கள் இல்லாமையினாலும், L மணஞ் கொண்டு மக்களைப் பெற்று இன்புறல்வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமையினாலுந், தனது காலத்தை வேட்ட மாடுவதிலும், வல்லூறு என்னும் பறவையைக் கொண்டு பிற புட்களைப்

வன்

பிடிப்பதிலுமே கழித்துவந்தான். மணஞ்செய்துகொள்ளாதிருத்தலை அறிவுடைமையாகச் சிலர் புகழ்ந்துபேசினாலும், அவனது செங்கோல் நீழற்கீழ் வாழுங் குடிமக்கள் அவன் அவ்வாறிருத்தலை விரும்பாராய், அவன் தனக்குத்தக்காள்ளா ஒருத்தியை மணங்கூடல் வேண்டு மென்றுந், தன்னரசுக்கு உரிமையாக ஒருமகன் இல்லாது அவன் இறத்தல் ஆகாதென்றும், நல்ல பெற்றோர்க்கு மகளாய்ப் பிறந்த ஒரு நங்கையைத் தாமே தேடியாராய்ந்து அவற்கு மணம் பொருத்தினால் தமது ஆவல் நிறைவேறுவதுடன் அவற்கும் மிகுந்த மனவமைதி யுண்டாகுமென்றும் வற்புறுத்தித், தமது கருத்துக்கு இணங்குமாறு அவனை வேண்டிக்கேட்டனர்.

66

அவரது வேண்டுகோளைச் செவிமடுத்த அம்மன்னன்: "அருமை நேயர்காள், யான் தலையிடுதற்கு விரும்பாத ஒரு நிகழ்ச்சியில் என்னைத் தலையிடுமாறு நெருக்குகின்றீர்கள்.

ரு

ஆனால், ஓராண்மகனோடு அவனிருக்கும் நிலைமை கட்கெல்லாம் இசைந்து அவனோடு ஒத்து வாழ்க்கை செலுத்தத் தக்க ஒரு பெண்மகள் கிடைத்தல் அரிதரிது. கணவனொடு மாறுகொண்டு நடக்கும் மனைவிமாரையே எங்குந்தொகை தொகையாய்க் காண்கின்றாம்! உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களிலுங் கொடியது, தனக்கு இசையாத ஒரு மனைவியுடன் கூடியிருக்கப் பெறுதலேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/185&oldid=1584849" இலிருந்து மீள்விக்கப்பட்டது